×
 

REOPEN...! கல்வி ஆண்டின் முதல் நாள்...! முதல்வர் விஜய் மாணவர்களுக்கு வாழ்த்து..!

இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், முதல்வர் விஜய் வாழ்த்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் 2026-27ஆம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் இன்று முழுமையாகத் திறக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இன்று பள்ளிக்கு வருகை தந்து புதிய கல்வியாண்டைத் தொடங்கியுள்ளனர். இது அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்துக்கும் பொதுவான அறிவிப்பாகும். 

முன்பு பள்ளிக் கல்வித் துறை ஜூன் 1 அன்று நான்காம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், ஜூன் 4 அன்று ஒன்று முதல் மூன்று வரையிலான மாணவர்களுக்கும் தனித்தனியே திறக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால், கோடை வெப்ப அலை மற்றும் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் வந்த கோரிக்கைகளை ஏற்று முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி முழு ஒத்திசைவுடன் ஜூன் 4-க்கு மாற்றப்பட்டது. 

புதிய கல்வியாண்டு தொடக்கத்தில் மாணவர்களுக்கு உற்சாகமான சூழல் உருவாக்க பள்ளிகள் தயாராக உள்ளன. பாடப்புத்தகங்கள், சீருடை, இலவச பாடப்பொருட்கள் வழங்கல், புதிய பாடத்திட்ட அம்சங்கள் ஆகியவை இந்த ஆண்டு கவனம் செலுத்தப்படும் அம்சங்களாகும். இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை, புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மேட்டூர் அணை திறப்பு எப்போது..? காத்திருக்கும் விவசாயிகள்... முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை..!!

கல்விதான் உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி என்றும் உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள், அதற்கேற்ப கடினமாக உழையுங்கள். பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றமாக இருக்கட்டும் என்றார். மகிழ்ச்சியாக கற்றுக்கொள்ளுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும் எனவும் வாழ்த்தியுள்ளார். 

இதையும் படிங்க: நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்... பட்ஜெட்..!! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share