"Mega political" சந்திப்பு..! தனி விமான மூலம் டெல்லிக்கு பறந்த முதல்வர் விஜய்..!
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதல்வர் விஜய் டெல்லிக்கு புறப்பட்டார்.
தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று, மே 10 அன்று முதலமைச்சராக பதவியேற்றார். அவரது கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆதரவுடன் பெரும்பான்மை நிரூபித்து ஆட்சியமைத்தது.
இது தமிழ்நாட்டில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்த திராவிடக் கட்சிகளின் இருமுனை ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. பதவியேற்ற பிறகு, முதல்வர் விஜய் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டார். அவரது பதவியேற்பு விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். விஜயும் அவர்களுக்கு பொதுவில் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் விஜய் தனது முதல் அதிகாரப்பூர்வ டெல்லி பயணத்தை மேற்கொண்டு உள்ளார். சென்னையில் இருந்து தனி விமான மூலம் முதல் வரவேச்சை டெல்லி புறப்பட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் டெல்லி visit..! பிரதமரை சந்திக்க திட்டம்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..!
அரசு முறை பயணமாக டெல்லி செல்லும் விஜய் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார். மத்திய அமைச்சர்கள் அமித் உஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நாளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை முதல்வர் விஜய் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 1 சவரன் தங்கம் + பட்டுப்புடவை..!! தவெக அரசின் "அண்ணன் சீர்" திட்டம் விரைவில் தொடக்கம்..!!