×
 

மேட்டூர் அணை திறப்பு எப்போது..? காத்திருக்கும் விவசாயிகள்... முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை..!!

மேட்டூர் அணை திறப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டின் விவசாயப் பொருளாதாரத்தின் முக்கிய தூணாக விளங்கும் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்ட மேட்டூர் அணை தமிழகத்தின் பெரிய அணைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி இந்த அணையின் மதகுகள் திறக்கப்படும் நிகழ்வு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மிகுந்த எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். இது வெறும் நீர் திறப்பு மட்டுமல்ல.

டெல்டா பகுதியின் குறுவை சாகுபடியின் தொடக்கமாகவும், பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு உயிர் கொடுக்கும் பாரம்பரிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு ஏற்ற நேரம் ஜூன் மாதம். பாரம்பரியமாக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுவது விவசாயிகளுக்கு ஒரு திட்டமிடப்பட்ட தேதியாக இருந்து வருகிறது.

இந்தத் தேதி சுமார் 92 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் சுமார் 20 முறை மட்டுமே சரியாகக் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேட்டூர் அணை திறப்பு தொடர்பாகவும் ஊரக உள்ளாட்சித் துறை குறித்தும் முதல்வர் விஜய் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர் ஆனந்த், தலைமைச் செயலாளர், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்... பட்ஜெட்..!! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!

மேட்டூர் அணை திறப்பு குறித்தும், விவசாயிகள் நலன் பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும் முதல்வர் விஜய் ஆலோசித்து வருகிறார். மேட்டூர் அணை ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி திறக்கப்படும் நிலையில் நடப்பாண்டு காலதாமதமாக திறக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

இதையும் படிங்க: எதிர்பார்ப்போடு வந்த தவெக ஆட்சி எதிர்ப்போடு கிளம்பியிருக்கிறது..!! தமிழிசை விளாசல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share