"திராவிடப் பேரொளி"..! அயோத்திதாசர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை ..!
அயோத்திதாச பண்டிதர் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் விஜய் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் திராவிடப் பேரொளி அயோத்திதாச பண்டிதரின் 181ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்களும் அயோத்திதாச பண்டிதர் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தி இருந்தனர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சி, சமூக நீதி, சாதி ஒழிப்பு மற்றும் திராவிட இயக்கத்தின் முன்னோடி சிந்தனைகளைப் போற்றும் வகையில் அமைந்தது. அயோத்திதாச பண்டிதர் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய சீர்திருத்தவாதியாகவும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான முதல் குரல்களில் ஒன்றாகவும் அறியப்படுகிறார்.
தமிழ், சித்த மருத்துவம், பத்திரிகை ஆசிரியர், அரசியல் சிந்தனையாளர் என பன்முகத் திறமைகள் கொண்ட இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். “தமிழன்”, “திராவிடன்” போன்ற அடையாளங்களை வலியுறுத்தி, சாதி பேதமற்ற சமூகத்தை உருவாக்க முயன்ற முன்னோடி அவர். அவரது சிந்தனைகள் பின்னர் திராவிட இயக்கத்துக்கு அடித்தளமிட்டன.
இதையும் படிங்க: கனிம வளங்கள் மூலம் புதிய தொழில் முதலீடுகள்... முதல்வரை சந்தித்த பின் அமைச்சர் டி.கே. பிரபு உறுதி..!
அயோத்திதாச பண்டிதரின் 181ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அயோத்திதாச பண்டிதரின் சிலைக்கு முதல்வர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் ராஜ்மோகன், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் அயோத்திதாச பண்டிதரின் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: சுகாதாரத்துறை சவால்கள்..? CM விஜய் தலைமையில் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை!