டெல்லி நோக்கி விஜய்..? டாப் மீட்டிங்..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!
முதல்வர் விஜய் நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றி கழக தலைவர் ஜோசப் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று, மே 10 அன்று முதலமைச்சராக பதவியேற்றார். அவரது கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆதரவுடன் பெரும்பான்மை நிரூபித்து ஆட்சியமைத்தது.
இது தமிழ்நாட்டில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக நீடித்த திராவிடக் கட்சிகளின் இருமுனை ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. பதவியேற்ற பிறகு, முதல்வர் விஜய் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டார். அவரது பதவியேற்பு விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் விஜயும் அவர்களுக்கு பொதுவில் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் விஜய் டெல்லி பயணத்தை மேற்கொள்ள உள்ளார். நாளை முதல்வர் விஜய் டெல்லி புறப்பட்டு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மத்திய-மாநில ஒத்துழைப்பு, தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களை விவாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பயிர் கடன் தள்ளுபடி என SCAM.. ஏமாற ரெடியா இருக்கணுமா CM சார்..? உதயநிதி குற்றச்சாட்டு..!
மாறாக மரியாதை நிமித்தமான சந்திப்பாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் சில துறை சார்ந்த முக்கிய அமைச்சர்களை முதல்வர் விஜய் சந்திக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. டெல்லி செல்லும் விஜய், ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரையும் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: பயிர்க்கடன் தள்ளுபடியில் பித்தலாட்டம்..! விஜய் அரசு மீது TTV தினகரன் குற்றச்சாட்டு..!