பயிர் கடன் தள்ளுபடி என SCAM.. ஏமாற ரெடியா இருக்கணுமா CM சார்..? உதயநிதி குற்றச்சாட்டு..!
பயிர்க்கடன் தள்ளுபடி என SCAM செய்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய அரசு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில், 2026 மே 25 அன்று பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களில், குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை முழு தள்ளுபடியும், பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 நிவாரணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டம் சுமார் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் எனக் கூறப்பட்டாலும், இந்த அறிவிப்பு விவசாய சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக இந்தத் திட்டம் வெளியாகியிருப்பதால், விவசாயிகள் இதை “மிகப்பெரிய ஏமாற்றம்” என விமர்சிக்கின்றனர்.
இதனிடையே, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் த.வெ.க அரசு விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள் என கூறினார். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள் என்றார்.
இதையும் படிங்க: முதல்ல வீட்டை விட்டு வெளியே வாங்க உதயநிதி! உங்க அப்பா ஆட்சினு நினைச்சீங்களா? நிர்மல்குமார் விளாசல்!
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி என்றும் குற்றம்சாட்டி உள்ளார். ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள் என்றும் இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள் எனவும் தெரிவித்தார். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar.? என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் வகித்த செயல் தலைவர் பதவி மீண்டும் வேணும்! திமுகவில் உதயநிதி, கனிமொழி தரப்பு போர்க்கொடி!