×
 

"போதைப்பொருள்" தடுப்பு படை..! அரசாணை வெளியீடு..! அடுத்தடுத்து அதிரடி காட்டும் முதல்வர் விஜய்..!

போதைப் பொருள் தடுப்பு படை அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் சி.ஜோசப் விஜய் மே 10 அன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றுக் கொண்ட சில மணி நேரங்களுக்குள் மூன்று முக்கிய அரசாணை கோப்புகளில் கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்று, மாநிலத்தை போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடாக மாற்றும் நோக்கில் 65 போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுகளை அமைக்கும் உத்தரவு ஆகும். இந்த நடவடிக்கை தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றை உடனடியாக நிறைவேற்றும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த அரசாணைப்படி, தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு போதைப்பொருள் தடுப்பு காவல் நிலையம் மற்றும் 9 மாநகரக் காவல் மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம் 65 சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படை பிரிவுகள் உருவாக்கப்படும். இந்தப் படைகள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பது, போதைப் பொருட்கள் நெட்வொர்க்குகளை ஒழித்தல், விற்பனை மற்றும் புழக்கத்தை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் இளைஞர்கள் அதிகம் கூடும் இடங்களில் போதைப்பொருள் விற்பனையைத் தடுப்பது, விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்துவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளும் இதில் அடங்கும். முதல்வர் விஜய் இந்த உத்தரவை தனது முதல் நாள் ஆட்சியின் முக்கிய முன்னுரிமையாகக் கருதினார்.

இதையும் படிங்க: முதல்வர் விஜய் இந்தியாவுக்கே முன் உதாரணம்… ஆரம்பமே அமர்க்களம்.. தவெகவுக்கு அமமுக MLA ஆதரவு ..!

தேர்தல் அறிக்கையில் "போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு" என்ற வாக்குறுதியை அவர் அளித்திருந்த நிலையில், பதவியேற்ற உடனேயே அதை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நடவடிக்கை மாநிலத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கம், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பரவும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக வலுவான சமிக்ஞையை அளிக்கிறது. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இந்தப் படை செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஜோசப் விஜயின் நேரடி கணக்கில் போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் போதைப் பொருட்கள் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: “தம்பி”..! முதல்வர் விஜயை வாசலிலேயே ஆரத்தழுவி வரவேற்ற சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share