×
 

ஒன் வீக் லண்டன் ட்ரிப் ரகசியம்... நாளை சி.எம். விஜய் செய்யப்போகும் தரமான சம்பவம்... அஜித்திற்கு செம்ம சர்ப்ரைஸ்...!

புகழ்பெற்ற சில்வர் ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டை பார்வையிடவும் முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளார்.

தொழில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் பயணித்துள்ள முதலமைச்சர் விஜய், அங்கு நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் சில்வர் ஸ்டோன் கார் பந்தயத்தை தொடங்கி வைக்க உள்ளதாக லேமான்ஸ் கோப்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்றிரவு சென்னையிலிருந்து புறப்பட்ட அவர், வரும் 17ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்புவார் என தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே வலுவாக நிலைபெற்றுள்ள வாகன மற்றும் மின்சார வாகன உற்பத்திச் சூழலை அடிப்படையாகக் கொண்டு, உலகத் தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் மாநிலத்தில் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க: "என் நெஞ்சில் குடியிருக்கும்"..! தவெகவுக்கு தனிப் பெரும் அங்கீகாரம்... முதல்வர் விஜய் பெருமிதம்..!!

அதன் அடிப்படையில், உலகின் முன்னணி மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு வசதிகளை உள்ளடக்கிய கட்டமைப்புகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் சிறந்த நடைமுறைகளை அறிந்துகொள்ள முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

மேலும், சுற்றுப்பாதை வடிவமைப்பு, பாதுகாப்பு அமைப்புகள், வளாகங்களைச் சிறப்பாகவும் வணிக ரீதியாகவும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட சிறந்த நடைமுறைகள் குறித்தும் அவர் விரிவாக அறிந்துகொள்ள உள்ளார்.

மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு உட்கட்டமைப்பு, விளையாட்டு சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய சிறப்பு வாகனத் தொழில் ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக இதன் மூலம் தெரியவந்துள்ளது.

முதலமைச்சருடன், முதலமைச்சரின் சிறப்பு அலுவலர் விஷ்ணு ரெட்டி, முதலமைச்சரின் தனிச் செயலாளர் செந்தில்குமார் ஐஏஎஸ், முதலமைச்சரின் கூடுதல் செயலாளர் விஷ்ணு ஐஏஎஸ், முதலமைச்சரின் உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் ராம்குமார் உள்ளிட்டோரும் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

குறிப்பாக, சில்வர் ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டை பார்வையிடவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதேபோன்று, அங்கு நடைபெற உள்ள கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் பங்கேற்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அந்தப் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

நாளை நடைபெற உள்ள சில்வர் ஸ்டோன் கார் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் முதலமைச்சர் விஜய், போட்டியை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக லேமான்ஸ் கோப்பை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தக் கார் பந்தயத்தில் நடிகரும் ரேசருமான அஜித்குமார், அஜித் ரீடான்ஸ் ரேசிங் அணிக்காக களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

இதையும் படிங்க: சி.எம்.விஜய் லண்டன் பயணம்... கை கொடுக்குமா? காலை வாரிவிடுமா? - நேரம் பார்த்து சீண்டிய ஆர்.பி.உதயகுமார்... !

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share