நீளும் பிரச்சனை... விஜய் வந்தால் போராட்டம்... கன்னட கூட்டமைப்பு தலைவர் எச்சரிக்கை..!
தமிழக முதல்வர் விஜய் கர்நாடகாவிற்கு வந்தால் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான நீண்டகால பிரச்னையில் முக்கிய திருப்பமாக, தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாரை பெங்களூரில் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.
மேகதாது அணைத் திட்டம் உள்ளிட்ட காவிரி தொடர்பான விவகாரங்களை இரு முதல்வர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த சந்திப்பு இரு மாநிலங்களுக்கும் இடையிலான நீர் பங்கீடு பிரச்னையில் புதிய உரையாடலுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேகதாது அணை பிரச்சனை வீரியம் எடுக்கும் நிலையில் முதல்வர் விஜயின் பேனர்களை கிழித்து கர்நாடகாவில் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலையை நிலவி வருகிறது. தமிழக முதலமைச்சர் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது என்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் டி கே சிவகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தற்போதைய சூழ்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் டி கே சிவகுமார் தெரிவித்திருக்கிறார். பதட்டமான சூழல் நிலவுவதால் தற்போதைக்கு முதலமைச்சர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: “ஒரு செங்கல்லை வைக்கக்கூட...” - மேகதாது அணை விவகாரத்தில் கொந்தளித்த செங்கோட்டையன்...!
இந்த நிலையில், விஜய் வந்தால் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரிநீர் கோரிக்கையுடன் முதலமைச்சர் விஜய் கர்நாடகா வந்தால் பெங்களூரு விமான நிலையம் முற்றுகையிடப்படும் என கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: தாயுமானவர் பெயருக்கு 'குட்பை'..! தவெக அரசின் அடுத்த அதிரடி..! நீலகிரி ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பு..!!