×
 

தாயுமானவர் பெயருக்கு 'குட்பை'..! தவெக அரசின் அடுத்த அதிரடி..! நீலகிரி ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பு..!!

தாயுமானவர் திட்டத்தின் பெயர் மாற்றம் செய்வது தொடர்பான செய்தி குறிப்பு வெளியானது.

தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததிலிருந்து முந்தைய திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களின் பெயர்களை மாற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கும் அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இந்தத் திட்டத்திற்குப் புதிய பெயர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டுமே உள்ள குடும்பங்களுக்கு ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொருட்களைப் பெறுவதில் ஏற்படும் இடர்பாடுகளைப் போக்கும் நோக்கில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அந்தக் குடும்பங்களின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற பெயரில் அப்போதைய அரசு இதை அறிமுகப்படுத்தியது.

ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் மூடிய வாகனங்களில் மின்னணு எடைத்தராசு மற்றும் இ-போஸ் இயந்திரங்களுடன் ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடு வீடாகச் சென்று பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் பல லட்சம் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயனளித்து வருகிறது.தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பிறகு நான் முதல்வன், மகளிர் விடியல் பயணம், முதல்வர் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களின் பெயர்கள் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: மேகதாது 2026-ல்தான் வந்ததா..? வயிற்றெரிச்சல்தான்..! திமுகவை வெளுத்து வாங்கிய த.வெ.க.!

அதன் தொடர்ச்சியாக தாயுமானவர் திட்டத்திலும் ‘தாயுமானவர்’ என்ற சொல் நீக்கப்பட்டு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் என்ற பொருளில் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முன்ஜாமின் தள்ளுபடி..! செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி... சுப்ரீம்கோட்டில் மேல்முறையீடு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share