"NO FLY ZONE" விதிகளை மீறிய CM விஜய்..? சட்ட நடவடிக்கை எடுக்கணும்... அதிமுக வலியுறுத்தல்..!!
NO FLY ZONE விதிகளை முதல்வர் விஜய் மீறியதாக அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய், சென்னை கிண்டி கத்திப்பாரா பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். 101 அடி உயரத்தில் நின்றபடி இந்த ஆய்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட ட்ரோன் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின.
இந்தக் காட்சிகள் திரைப்பட ஸ்டைலில், ரீல்ஸ் போன்று தோற்றமளிப்பதாக பலரும் பாராட்டினர். ஆனால், இந்த நிகழ்வு பாதுகாப்பு விதிமுறைகளை மீறியது என அதிமுக கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. கத்திப்பாரா பகுதி சென்னை விமான நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி Red Zone அல்லது No Fly Zone-ஆக DGCA விதிகளின்படி வரையறுக்கப்பட்டுள்ளது.
இங்கு எந்தவித ட்ரோன்களும் பறக்க அனுமதி இல்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தத் தடை அமலில் உள்ளது. முதலமைச்சர் இந்த விதிகளை மீறி ரீல்ஸ் ஷூட்டிங் போன்று ட்ரோன் பயன்படுத்தியதாக அதிமுகவின் ஐடி பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.
இதையும் படிங்க: எஸ்.பி. வேலுமணிக்கு மீண்டும் முக்கியத்துவம்..! துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்கிய EPS..!!
“நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்த புரிதல் இல்லாமல் ஒரு முதலமைச்சர் ரீல்ஸ் எடுப்பதற்காக No Fly Zone விதிகளை மீறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று அதிமுக தரப்பில் தெரிவித்துள்ளனர். மத்திய அரசும், DGCA-வும் உடனடியாக தலையிட்டு வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்தச் செயல் அரசியல் பொறுப்புணர்வு இல்லாத செயல் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: பதவி ராஜினாமா எதற்கு..? கட்சி தாவிய விவகாரம்... பதில் கொடுக்க ஆணை..!!