பிளாஸ்டு... பிளாஸ்டு...!! - சென்னை மாரத்தானில் சி.எம்.விஜய்... கூலிங்கிளாஸ் உடன் ஸ்டைலா, கெத்தா ரன்னிங்...!
போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தானில் முதல்வர் விஜய் பங்கேற்றார்.
போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை காமராஜர் சாலையில் 'ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்' என்ற விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில், பிரத்யேக விழிப்புணர்வு பாடலுடன் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியை, முதல்வர் விஜய் கையெழுத்து போட்டு துவங்கி வைத்தார். அதன்பிறகு, போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். முதல்வர் விஜய் உறுதிமொழியை வாசிக்க, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இதையும் படிங்க: நெய்வேலி தமிழ்நாட்டின் அடையாளம்... பங்கு விற்பனை முடிவுக்கு விஜய் கடும் எதிர்ப்பு..!! பிரதமருக்கு கடிதம்..!!
போதைப்பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. முதல்வர் விஜய் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை கொடியசைத்தும், Sports-யை எடு Drug-யை விடு என்ற வாசகத்தை எழுதியும் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர், போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, அந்த மாரத்தானில் முதல்வர் விஜயும் பங்கேற்று ஓடினார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ், வெங்கட்ரமணன், ஆனந்த் உள்ளிட்ட பல ஆயிரம் பேர் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று உற்சாகமாக ஓடினர்.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/cm-vijay-participates-anti-drug-run-2026-in-chennai-811561.html
இதையும் படிங்க: தமிழக நிதி நிலை குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓபன் டாக்... அரசியலில் புதிய விவாதம்!"