×
 

ஜோசியர் சொல்லிட்டாராம்..!! அலுவலகத்தை மாற்றுகிறாரா முதல்வர் விஜய்? பரபரப்பு தகவல்..!!

முதலமைச்சர் அலுவலகத்தில் இட நெருக்கடி ஏற்படுவதால், அவரை சந்திக்க வருபவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது.

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் அலுவலகம் சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலக கட்டிடத்தின் முதல் தளத்திலிருந்து அருகிலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், இட நெருக்கடி மற்றும் வாஸ்து சாஸ்திர ஆலோசனை ஆகியவை இந்த மாற்றத்துக்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

தற்போது கோட்டை கட்டிடத்தில் முதலமைச்சர் அலுவலகம் மட்டுமின்றி, அமைச்சர்களின் அலுவலகங்கள், சட்டசபை கூட்ட அரங்கம், தலைமைச் செயலாளர் அலுவலகம், பல்வேறு துறை செயலாளர்களின் அறைகள், தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் மற்றும் நூலகம் உள்ளிட்ட முக்கிய அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த இட நெருக்கடியால், தினசரி முதலமைச்சரைச் சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் பலர் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சந்திப்புக்கு காத்திருப்பவர்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இந்த இட நெருக்கடியால் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், முதலமைச்சர் அலுவலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது அந்த மாடியில் கருத்தரங்கு கூடம் மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கான உணவு விருந்து அரங்கம் இயங்கி வருகின்றன. இவற்றை வேறு இடங்களுக்கு மாற்றிவிட்டு, முழு மாடியையும் முதலமைச்சர் அலுவலகப் பயன்பாட்டுக்கு ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: துப்பாக்கி முனையில் போலீசார் மிரட்டுகிறார்கள்! மருத்துவமனை வாசலில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் குற்றச்சாட்டு!

உயரமான மாடியில், கடலை நோக்கிய நிலையில் அலுவலகம் அமைவது முதலமைச்சரின் நிலை மேலும் உயர உதவும் என ஆஸ்தான ஜோதிடர் வாஸ்து ஆலோசனை வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய அறை வாஸ்துபடி சரியில்லை என்பதும் இந்த மாற்றத்துக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த இடமாற்றம் தமிழக அரசின் நிர்வாக செயல்பாடுகளை மேலும் சீரமைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வராத நிலையில், அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. முதலமைச்சர் அலுவலகத்தின் புதிய இடம், அதிக இடவசதி, சிறந்த அணுகல் வசதி மற்றும் நவீன வசதிகளுடன் செயல்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "50 நாளில் 9 ஆணவ கொலைகளா?" முதல்வர் விஜய்க்கு திராவிட தமிழர் கட்சி அதிரடி செக்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share