பாட்டுக்கு பாட்டு கச்சேரி..! எங்களுக்கும் தெரியும்... இழுத்து மூடுங்க பேரவை கதவை..! முதல்வர் விஜய் ஃபயர் ஸ்பீச்..!
கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பேசும் பொழுது திமுகவை விமர்சித்தார்.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக கருவூருக்கு சென்றுள்ள முதல்வர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் பங்கேற்றார். அப்போது பேசிய முதல்வர் விஜய், திமுக விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார். வாயத் திறங்க சிஎம்..! என்று திமுக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டி முதல்வர் விஜய் பேசும்போது, பேசினால் எழுந்து ஓடி விடுகிறார்கள் என்றும் பேசாமல் தன் வேலையை பார்த்தால் பேசுவதை இல்லை என்று விமர்சிப்பதாகவும் தெரிவித்தார்.
சட்டப்பேரவையை விட்டு ஓடுகிறார்கள் என்றும் விமர்சித்தார். சபாநாயகர் அவர்களே சட்டப்பேரவை கதவை இழுத்து மூடுங்கள். என்று கூறிவிட்டு தான் பேச வேண்டும் போல என்று கலாய்த்தார். பேசுங்க பேசுங்க என்று கூறுவதாகவும், கொளத்தூரில் ஐந்து நிமிடம் பேசியதற்கே கொத்து பரோட்டா போட்டு விட்டார்கள் என்றும் கிண்டல் அடித்தார். பாட்டுக்கு பாட்டு கச்சேரி எங்களுக்கும் தெரியும் என்றும் கூறினார்.
மக்கள் உரிமையை உரிய நேரத்தில் காப்போம் என்று தெரிவித்துள்ள முதல்வர் விஜய் தொகுதி மறு வரையறையை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது என்று தெரிவித்தார். தாய்மாமன் தங்க மோதிர திட்டம் நிச்சயம் தொடங்கப்படும் என்றும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம் எனவும் உறுதிப்படக் கூறினார். மேகதாது அணை பற்றி முதல்வர் விஜய் ஏன் பேசவில்லை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகவும் குறை மேல் குறை கூறி வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓட்டை பாத்திரத்துல தண்ணி ஊத்துனாங்க..! ஒன்னொன்னா வரும்..! வெள்ளை அறிக்கையை சுட்டிக்காட்டி முதல்வர் விஜய் பேச்சு..!
மேகதாது அணை சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில் அப்போது யார் ஆட்சியில் இருந்தார்களோ அவர்கள் ஏன் ஒழுங்காக வாதாடவில்லை என்று கேட்டார். மாநிலத்தின் உரிமையை பாதுகாப்பதே முக்கியம் என்றும் தெரிவித்தார். நாங்கள் யார் தெரியுமா? தொட்டுப்பார் போன்ற வீர வசனங்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை எனவும் முதல்வர் விஜய் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பார்ட்டி ஃபண்ட்..! எடுத்தாங்க பாரு ஓட்டம்..! திமுகவை கலாய்த்த cm விஜய்..!