"எங்கும் தமிழ்"..! தமிழுக்கு தனி மரியாதை..! சட்டப்பேரவையில் CM விஜய் கொண்டு வந்த முக்கிய தீர்மானம்..!!
தமிழ்த்தாய் வாழ்த்து தனித் தீர்மானத்தை சட்டப்பேரவை முதல்வர் விஜய் முன்மொழிந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலைக் கூட்டத் தொடர் அமர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. புதிய அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை அன்று நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேளாண்மை நிதிநிலை அறிக்கை, பொது விவாதங்கள், இரங்கல் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவல்கள் நடைபெற்று வந்தன.
இந்தக் கூட்டத் தொடர் செப்டம்பர் 8 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி சட்டப்பேரவை கூடியபோது முதல்வரின் முன்னெடுப்பில் ஒரு முக்கிய தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான இந்தத் தீர்மானம் இந்தக் கூட்டத் தொடரில் முதல் வரிசையில் வைக்கப்பட்ட தனித் தீர்மானமாக அமைந்தது. முதல்வர் இதை நேரடியாக முன்மொழிந்தார்.
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசும்போது தாய் எப்படி புனிதமோ அதைப் போன்றே தாய் மொழியும் என்று தெரிவித்தார். இந்தியாவின் நெற்றியில் இருக்கும் பொட்டு தான் தமிழ் மொழி என்று கூறினார். தமிழும் தமிழனும் இல்லாத நாடு எது என்று கேட்டார். எந்த ஊரு தமிழ் மொழி மட்டுமல்ல தமிழ் நம் உயிர் என்றும் தமிழ் நமது உணர்வு எனவும் தெரிவித்த முதல்வர் விஜய் தாய் நமக்கு மிகப் பெரிய புனிதம் என்றால் நாம் எல்லோரும் போற்றும் தமிழ் தாய் பற்றி சொல்லவா வேண்டும் என்று கேட்டார்.
இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முதலிடம்! இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனித் தீர்மானம்!
பொது நிகழ்ச்சிகளை தொடக்கத்தில் முதலாவதாக தமிழ் தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஏக மனதாக. கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் தமிழ் தாய் வாழ்த்து முதலாவதாக பாடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: விஜய் 5 வருஷம் நினைச்சாலும் நல்ல பட்ஜெட் போட முடியாது! கரூரில் சிபிஐ வீரபாண்டியன் பேச்சு!