×
 

NLC துரோகம்... துணைப் போக தான் ஆட்சிக்கு வந்தீங்களா விஜய்..? வேல்முருகன் ஆவேசம்..!!

NLC விவகாரத்தை சுட்டிக்காட்டிய முதல்வர் விஜயை வேல்முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

விவசாயிகளின் நிலத்தைப் பறிப்பதுதான் சனநாயக ஆட்சியா? என்எல்சி நிறுவனத்தின் துரோகங்களுக்குத் துணை போகத்தான் ஆட்சிக்கு வந்தீர்களா? என முதல்வர் விஜய்க்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பினார். 

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் விரிவாக்கம் என்ற பெயரில் மீண்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களைப் பறிப்பதற்காக மாவட்ட வருவாய் அலுவலரை நியமித்திருக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு எதிரானது என கூறினார். ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்கள் எங்கே? அவை அனைத்தும் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு விட்டனவா? என்கிற கேள்விகளுக்கு இன்று வரை பதில்கள் இல்லாத நிலையில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் இன்று வரை பயன்பாடின்றிக் கிடப்பதாக கூறியுள்ளார்.

என்எல்சி நிர்வாகத்தின் தோல்வியை மறைக்க மேலும் புதிய நிலங்களை கையகப்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்றும் இதுதான் வளர்ச்சியா என்றும் இதுதான் பொருளாதாரக் கொள்கையா எனவும் சரமாரி கேள்விகளை முன் வைத்தார். தேர்தல் நேரத்தில் விவசாயியின் கையைப் பிடித்து வாக்குகள் கேட்டவர்கள், இன்று அதிகாரத்தின் துணைக்கொண்டு விவசாயிகளின் கழுத்தை நெரிப்பது ஏன்? விவசாயிகளைக் காப்போம் என்ற முழக்கம் வெறும் தேர்தல் நாடகமா?

இதையும் படிங்க: தமிழ் தாய் வாழ்த்துக்கு இந்த நிலையா..? CM விஜய் மௌனமாக இருப்பது ஏன்..? விளாசிய வேல்முருகன்..!!

ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயியின் நிலத்தைப் பறிப்போம் என்பதுதான் உங்கள் உண்மையானக் கொள்கையா? என்றும் கேட்டார். மக்களின் எதிர்ப்பையும், போராட்ட வரலாற்றையும் அறிந்திருந்தும், மீண்டும் நில அபகரிப்பிற்காக அதிகாரிகளை நியமிப்பது என்பது வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல. அது மக்கள் போராட்டங்களையே அவமதிக்கும் அதிகாரத் திமிராகும் என்றார்.

நிலம் இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிரந்தர வேலை, வாழ்நாள் வருமானப் பாதுகாப்பு, என்.எல்.சி. இலாபத்தில் பங்கு, தரமான கல்வி, மருத்துவம், குடியிருப்பு உள்ளிட்ட முழுமையான மறுவாழ்வை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். உள்ளூர் இளைஞர்களுக்கு குறைந்தபட்சம் 80 சதவீத வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கூறினார். விவசாயி வயிற்றில் அடிப்பது தான் வளர்ச்சியா என்றும் சாடினார்.

இதையும் படிங்க: மின்வாரியமா..? பணப்பறிப்பு வாரியமா..? அதிர்ச்சியூட்டும் பில்..! வேல்முருகன் தாக்கு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share