கூலிப்படை தலைவர்களாக மாறிவரும் தவெக நிர்வாகிகள்..! குற்றவாளிகளை பிடிங்க CM..! நயினார் வலியுறுத்தல்.!
தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் கூலிப்படை தலைவர்களாக மாறி வருகிறார்கள் என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
முதலமைச்சர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்து வருவதாக எதிர் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், கூலிப்படை தலைவர்களாக தவெக நிர்வாகிகள் மாறிவருவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நிர்வாகிகள்” என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் குற்றவாளிகளின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கேளம்பாக்கம் அருகே தையூரில் தவெக நிர்வாகியான ஏழுமலை என்பவர் தனது மகளின் காதலனை கூலிப்படை ஏவி கொலை செய்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். விஜய் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றது முதல், தவெக நிர்வாகிகளின் அராஜகங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், ரவுடியிசம், மாமூல் பிரச்சினைகள் என ஒரு பெரிய சட்டவிரோத வலையமைப்பே தவெகவிற்குள் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது என்றார். ஆனால், கட்சித் தலைமை அதை கவனிக்க மறுப்பது கண்டனத்திற்குரியது என்றும் கூறினார் .
இதையும் படிங்க: "பக்கத்து இலைக்கு பாயாசமா".? செட்டிங் ரெடி போலயே..! முதல்வர் அறை விஷயத்தில் ஆதவ் கருத்தை விளாசிய நயினார்.!!
ஒரு பிரச்சினை நடந்த பிறகு நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்குவதும், கைது செய்வதும் வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். தனது கட்சிக்குள் “நிர்வாகிகள்” என்ற போர்வையில் ஒளிந்திருக்கும் குற்றவாளிகளின் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: நயினார் நாகேந்திரன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...! மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்.!!