"பக்கத்து இலைக்கு பாயாசமா".? செட்டிங் ரெடி போலயே..! முதல்வர் அறை விஷயத்தில் ஆதவ் கருத்தை விளாசிய நயினார்.!!
முதலமைச்சரின் அறை மாற்றம் டெண்டர் தொடர்பான அர்ஜுனாவின் கருத்தை நைனார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.
அலுவலர்களின் வசதிக்காக என்றாலும் கூட, டெண்டர் முடியாமல் எப்படி பணிகளை துவங்க முடியும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிற்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். இன்னாருக்கு தான் கொடுக்கப் போகிறோம் என்று முடிவு செய்துவிட்டு டெண்டர் விடுகிறீர்களா என்றும் கேட்டுள்ளார்.
முதல்வர் அலுவலகம் மாற்றத்திற்கான டெண்டரில் உள்ள குளறுபடிகள் குறித்து சட்டமன்றத்தில் எழுந்த கேள்விகளுக்கு, “இன்னும் டெண்டரே முடியவில்லை, எல்லாம் அரசு அதிகாரிகளின் வசதிக்காகத் தான், எங்கள் முதல்வர் எளிமையானவர்” என்றெல்லாம் வசனம் பேசிய நீங்கள், ஒரு “Flow”-இல் பல உண்மைகளையும் உளறிவிட்டீர்கள் என்று விமர்சித்துள்ளார்.
அதாவது, டெண்டரே இன்னும் முடியவில்லை என்றால், எதன் அடிப்படையில் முதல்வர் அறைக்கான புதுப்பித்தல் பணிகள் துவங்கப்பட்டன? இன்னாருக்கு தான் கொடுக்கப் போகிறோம் என்று ஏற்கனவே “Setting” செய்துவிட்டீர்களா? இதற்கு முன்பு இப்படி டெண்டர் விடாமல் இப்படி பணிகள் நடந்துள்ளனவா? மேலும், செய்தித்தாள் விளம்பரத்தில் 5.54 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுவிட்டு, ஆன்லைன் டெண்டரில் தொகையைக் குறிப்பிடாமல் 'NA' என்று பதிவிட்டது ஏன்? மற்ற ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பதைத் தடுக்கவே இந்தச் சதியா? என்று கேட்டார்.
இதையும் படிங்க: 45 ஆயிரம் கி.மீ சாலைகள்… ரூ.500 கோடி கேமராக்கள்.! திருநர்களுக்கு தனி போட்டிகள்..!! அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகள்..!!
உங்கள் பித்தலாட்டங்களுக்கு புரட்சித் தலைவி அம்மாவின் பெயரை இழுக்கிறீர்களே, புரட்சித் தலைவி அம்மா ஒட்டுமொத்த தலைமை செயலகத்தையே வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று தான் நினைத்தாரே தவிர, தனது அலுவலகத்தை மட்டும் நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், உங்கள் முதல்வர் தனது துறைக்கான அலுவலகத்தை மட்டும் புதுப்பித்துக் கொள்ள நினைப்பது ஏன்? என்று கேட்டார். “அரசு அதிகாரிகளின் வசதிக்காகத் தான் இந்த மாற்றம்” என்று கூறுவது, ““பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்பது போலானது” எனவும் விமர்சித்து உள்ளார்.
இதையும் படிங்க: அடங்கா ஆணவம் அழிவுக்கு வழி..! அமைச்சர் ஆதவிற்கு நயினார் தாக்கு..!!