×
 

சூடுபிடித்த குறுவை சாகுபடி விவகாரம்..! CM விஜய் - உதயநிதி காரசார வாதம்..!

குறுவை சாகுபடி தொடர்பாக முதல்வர் விஜய் - உதயநிதி ஸ்டாலின் இடையே காரசார வாதம் ஏற்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெற்ற பொது பட்ஜெட் விவாதத்தின் போது குறுவை சாகுபடி தொடர்பான விவகாரம் பெரும் காரசார வாதத்திற்கு வழிவகுத்தது. காவிரி நீர் பிரச்சனை மற்றும் மேகதாது அணை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறுவை சாகுபடி பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.

காவிரியில் தண்ணீர் வராததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அந்த மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து விவசாயிகளுக்கு தனியான வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் விஜய், குறுவை சாகுபடி நிவாரண தொகுப்பு ஏற்கனவே அரசால் வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாகக் கூறிக்கொண்டே இந்த விவரம் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும், முன்னும் பின்னும் செய்தித்தாள்களைப் படித்திருந்தால் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரிந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும், மேகதாட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் உறுதியளித்தார். கர்நாடக அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த பெங்களூரு செல்ல முடிவெடுத்தது தானே என்றும், பகை நாடுகளே பிரச்சனைகளைப் பேசித் தீர்க்கும் நிலையில் அண்டை மாநிலத்துடன் பேசித் தீர்க்கலாம் என்று நினைத்ததாகவும் விளக்கினார்.உதயநிதி ஸ்டாலின் உடனடியாக பதிலடி கொடுத்தார். அரசு அறிவித்தது சிறப்பு நிவாரணத் தொகுப்பு மட்டுமே என்றும், அது எல்லா அரசுகளும் வழக்கமாக அறிவிக்கும் வகையிலானது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: காவிரி உரிமையில் CM விஜய் கறார்..! மேகதாது விவகாரத்தில் முதல்வரின் அதிரடி ட்விஸ்ட்... பெங்களூரு சர்ச்சைக்கு DOT..!

தற்போது ஏற்பட்டிருப்பது கடுமையான வறட்சி நிலைமை என்பதால் விவசாயிகள் தனியாக வறட்சி நிவாரண நிதியைக் கோருகின்றனர் என்றும், இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். செய்தித்தாள்களை மட்டும் படித்தால் போதாது, விவசாயிகளை நேரடியாகச் சந்திக்க வேண்டும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவசாய சங்கங்களுடன் ஆலோசிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தமிழ்நாடு அரசு அத்தகைய கூட்டத்தைக் கூட்ட என்ன தயக்கம் என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் மாஸ்டர் மூவ்... விஜய்க்கு புதிய நிபந்தனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share