வைகோவிடம் வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்..! பட்டுத்துண்டு அணிவித்து வரவேற்ற எம்பி துரை வைகோ..!
அரசியல் மூத்த தலைவர் வைகோவிடம் முதல்வர் விஜய் வாழ்த்து பெற்றார்.
தமிழக சட்டசபை தேர்தலில் தனி பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றிய தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 120 எம்.எல்.ஏ.க்கள் என்ற பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். இன்று முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்ற நிலையில் எம்எல்ஏக்கள் பதவியேற்று கொண்டனர்.
சட்டப்பேரவை நிறைவடைந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை முதல்வர் விஜய் நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். ஸ்டாலினை தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சென்னை அண்ணா நகரில் உள்ள வைகோவின் இல்லத்திற்கு முதல்வர் விஜய் சென்றார். வாசலில் காத்திருந்து முதல்வர் விஜய்க்கு பட்டுத்துண்டு, மாலை அணிவித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ வரவேற்றார்.
இதையும் படிங்க: திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த முதல்வர் விஜய்..! ஆரத்தழுவி வரவேற்ற நெகிழ்ச்சி சம்பவம்..!
தொடர்ந்து மூத்த அரசியல் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான வைகோவை முதல்வர் விஜய் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக சந்தித்து அங்கிருந்து கிளம்பிய முதல்வர் விஜயை வாசல் வரை வந்து முதல்வர் விஜய்யை வைகோ வழியனுப்பி வைத்தார். மகிழ்ச்சியில் முதல்வர் விஜய்யுடன் கைகோர்த்து மக்களை நோக்கி கையசைத்தார். பேரறிஞர் அண்ணாவின் பாணியை பின்பற்றி அடுத்தடுத்து முக்கிய அரசியல் தலைவர்களை விஜய் சந்தித்து வருகிறார்.
இதையும் படிங்க: தனது பெரும்பான்மையை அவர் நிரூபிப்பார்..!! முதல்வர் விஜய்க்கு உமர் அப்துல்லா வாழ்த்து..!!