"தனித்துவமான முதல்வரின் முகவரி"... சேவைகளை சிறப்பாக பயன்படுத்த முதல்வர் கனிவான வேண்டுகோள்!
முதல்வரின் முகவரித் துறையை பொதுமக்கள் சிறப்புறப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதல்வரின் முகவரி துறை என்பது, முதலமைச்சரின் தனிப்பிரிவு, உதவி மையம், குறைதீர்ப்பு அமைப்பு மற்றும் உங்கள் தொகுதியில் முதல்வர் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட ஒரு புதிய துறை. இது பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை மக்களுக்கு எடுத்துச் செல்லவும் உதவுகிறது. இந்த துறையின் சேவைகளை மக்கள் சிறப்புறப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில், மக்களால் எளிதில் அணுகக்கூடிய, எல்லோருடைய குறைகளையும் காது கொடுத்துக் கேட்டுத் தீர்வுகாணக் கூடிய திராவிட மாடல் அரசில், தனது நேரடிக் கட்டுப்பாட்டில், அமுதா அவர்களது தலைமையில் மக்களின் குறைகளைக் களைந்து ஏற்றத்துக்கு முதற்படியாய் முதல்வரின் முகவரிதுறை விளங்குகிறது என கூறியுள்ளார். பொதுமக்கள் இந்தத் திட்டத்தினைச் சிறப்புறப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எட்டுத்திக்கும் பாவேந்தரின் புகழ்! தமிழ் மணக்கும் வார விழா நிறைவு நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்பு...
இதையும் படிங்க: அதிமுக - பாஜக தான் வெற்றி கூட்டணி! திமுக பச்சோந்தி..லிஸ்ட் போட்ட இபிஎஸ்...