மெரினாவை அடுத்து கொடிசியாவுக்கு பூட்டு... கோவையில் போலீஸ் படை குவிப்பு... தவெக அரசு அதிரடி...!
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
கோவை கொடிசியா மைதானத்தில் நீட் எதிர்ப்பு போராட்டத்திற்காக மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்தும், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அங்கு தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் , அதற்கு ஆதரவாகவும்
டெல்லியில் நடைபெறும் போராட்டத்தின் எதிரொலியாக சென்னையிலும் மாணவர்கள் போராட தொடங்கினர். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஒருங்கிணைந்த குரல் இப்போது இந்திய அளவில் பரவ வேண்டும் என்கிற வலியுறுத்தலுடன் புதிய போராட்ட அழைப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: போராட்டத்தில் குதித்த லயோலா கல்லூரி மாணவர்கள்... கொதிக்கும் தமிழகம்.. ரத்தாகுமா நீட்..?
தமிழ்நாடு மாணவர், இளைஞர் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட இந்த அழைப்பு, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் முக்கியத்துவம் பெறுகிறது. நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட இட ஒதுக்கீட்டை பாதிக்கும் வகையில் இந்தத் தேர்வு செயல்படுவதாக பல தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு இதற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியும், மத்திய அரசின் அணுகுமுறை மாறாமல் உள்ளது. இந்தச் சூழலில் மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் மெரினாவிற்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் ஒரு காவல் மரணம்..? 26 வயது இளைஞர் பலி..! உறவினர்கள் போராட்டம்.!
ஏற்கனவே ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக மெரினா புரட்சி வெடித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மெரினாவில் குவிந்துவிடாமல் தடுக்க 2 துணை ஆணையர்கள் தலைமையில் போலீசார் 200 பேர் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் போராடும் மாணவர்கள், இளைஞர்கள் மெரினாவில் கூடிவிடாமல் தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான ஜீவா இல்லம், திமுக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொடிசியா மைதானத்தில் மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை தொடங்கி விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல் உதவி ஆணையாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் கொடிசியா வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர் போராட்டங்களை நடத்த திரண்டால் ஆரம்ப கட்டத்திலேயே அவர்களை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தலைநகரை கடந்து பரவிய போராட்ட ’தீ’... தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் தகிக்கும் மாணவர்கள் போராட்டம்...!