கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம்... துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்து சிறப்பிப்பு...!
கோவையில் உருவாக்கப்பட்ட சர்வதேச ஹாக்கி மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவையில் அமைந்துள்ள சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் 7.02 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம், கோவை விளையாட்டு ஆர்வலர்களின் நீண்ட கால கனவை நிறைவேற்றும் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது.
இந்தத் திட்டம் கடந்த 2025 ஏப்ரல் 27ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 9.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த மைதானம், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் செயற்கை புல்வெளி எனப்படும் ஆஸ்ட்ரோ டர்ஃப் அமைக்கப்பட்டுள்ளது.
இதனுடன், 147 சதுர மீட்டர் பரப்பளவில் டிரெஸ்ஸிங் ரூம், 17 மீட்டர் உயரமுள்ள ஆறு மாஸ்ட் லைட்டுகள் (ஒவ்வொன்றிலும் 500 வாட் LED விளக்குகள்), பாப்-அப் ஸ்ப்ரிங்க்ளர் அமைப்பு, வீரர்களுக்கான டக்-அவுட்கள் மற்றும் பாதுகாப்பு வேலி போன்ற உள்கட்டமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. கட்டுமானப் பணிகள் விரைவாக நிறைவடைந்து, சமீபத்தில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து பாராட்டு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பயன்பாட்டுக்கு வந்தது செம்மொழிப் பூங்கா..!! கோவை மக்கள் ஹேப்பி அண்ணாச்சி..!!
இந்த மைதானம் தமிழ்நாட்டில் ஹாக்கி விளையாட்டை மேலும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும் ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு, கோவையும் சர்வதேச போட்டிகளை நடத்தும் திறன் பெற்ற மையமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: துடிக்க துடிக்க மனைவி கொலை.. சடலத்துடன் WhatsApp Status வைத்த கணவன்..!! கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன..??