இன்டர்நெட்டில் மனைவியின் அந்தரங்க புகைப்படம்.!கணவனுக்கு தர்ம அடி.! பொளந்து கட்டிய உறவினர்கள்..!!
கோவையில் மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய கணவனுக்கு தர்ம அடி விழுந்தது.
காதல் மனைவியின் அந்தரங்க படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கணவன் மீது, மனைவியின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராம் பிரசாத் வயது 29. இவர் பிளிப்கார்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் செலக்கரிச்சல் பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியா (25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி கடந்த ஒருவாரமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கணவன் தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக கூறி சண்முகப்பிரியா சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து ராம் பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று மாலை காவல் நிலையம் வந்து விசாரணைக்காக காத்திருந்தனர். அப்போது செலக்கரிச்சல் பகுதியில் இருந்து காரில் வந்து இறங்கிய சண்முக பிரியா குடும்பத்தினர் காரில் இருந்து இறங்கியவுடன் நேராக ராம் பிரசாத் இருந்த இடத்திற்கு சென்று அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: பாக்., நெட்வொர்க் தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி? தஞ்சாவூர், கோவையில் 7 பேர் கைது! NIA விசாரணையில் திடுக் தகவல்கள்!
இதில் அடி தாங்க முடியாமல் ராம் பிரசாத் கதறி உள்ளார். சத்தம் கேட்டு காவல் நிலையத்தில் இருந்த தலைமை காவலர் பாலமுருகன் மற்றும் பெண் காவலர் பிரியா ,மற்றும் காவலர்கள் உடனடியாக சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது அந்த கும்பல் தலைமை காவலர் மற்றும் பெண் காவலரையும் தள்ளிவிட்டு, மீண்டும் ராம் பிரசாத் மீது தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, அந்த கும்பலிடம் இருந்து ராம் பிரசாத்தைக் காவல்நிலத்திற்குள் அழைத்துச் சென்றனர்.
காரில் வந்த கும்பல் தாக்கியதில் காயமடைந்த தலைமை காவலர் மற்றும் பெண் காவலர் சூலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேலும் தாக்கிய கும்பலில் இருந்த சண்முகப் பிரியாவும் காவல்நிலத்தில் மயங்கி விழுந்ததால் அவரையும் அவரது கடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்துனர். இந்த சம்பவத்தால் சூலூர் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?