×
 

நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான்! பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி!

நீட் தேர்வைக் கொண்டுவந்ததே காங்கிரஸ் கட்சிதான் என்று சாடியுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடியை இழிவுபடுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை காவலாணையரிடம் புகார் அளித்துள்ளார்.

நீட் தேர்வை நாட்டில் முதன்முதலில் கொண்டுவந்ததே காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும்தான் என்றும், தற்போது டெல்லியில் போராட்டம் நடத்துவது மாணவர்கள் அல்ல, காங்கிரஸ் கட்சியினரே என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார். கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் மனு அளித்த பின்னர், நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரங்கள்.

நீட் தேர்வு மற்றும் டெல்லி போராட்டம் குறித்து நயினார் நாகேந்திரன் பேசியதாவது நீட் தேர்வு முறையைக் கொண்டுவந்ததே காங்கிரஸ் கட்சிதான்; அன்றைக்கு ராகுல் காந்திதான் இதனை முன்னெடுத்தார். ஆனால், இன்றைக்கு அவர்களே அதைக் கண்டித்துப் போராடுவது வேடிக்கையாக உள்ளது. காங்கிரஸுக்குக் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? நீட் தேர்வு கொண்டுவரப்படுவதற்கு முன்பாக ஏழை, எளிய குடும்பத்து பிள்ளைகளால் மருத்துவக் கல்வியைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத நிலைதான் இருந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீட் தேர்வு வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள நிலையில், இன்னமும் 'வேண்டாம் வேண்டாம்' என்று எதிர்த்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து அவர் கூறியதாவது டெல்லியில் வீதியில் இறங்கிப் போராடுபவர்கள் உண்மையான மாணவர்கள் கிடையாது; அவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். நாடாளுமன்றத்தில் முக்கியமான மசோதாக்கள் கொண்டுவரப்படும் போதெல்லாம் இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்துவதையே காங்கிரஸ் திட்டமிட்டுச் செய்து வருகிறது. இது ஒரு தேசத்துரோகச் செயலாகும். இந்தச் சட்ட ஒழுங்குப் பிரச்சினையைத் தூண்டிவிட்டதே ராகுல் காந்திதான். காங்கிரஸ் கட்சி இவ்வளவு கோழைத்தனமான அரசியலில் ஈடுபடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

இதையும் படிங்க: BAN NEET..! அதான் ஒரே வழி... வெடிக்கும் டெல்லி போராட்டம்... ஸ்டாலின் வலியுறுத்தல்.!!

பிரதமர் நரேந்திர மோடியைச் சமூக வலைதளங்களில் இழிவுபடுத்திப் பதிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை காவல் ஆணையரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரைப் பற்றி விமர்சித்துப் பேசியதற்காக விளாத்தி குளம் எம்.எல்.ஏ-வை அதிகாலையிலேயே சென்று அதிரடியாகக் கைது செய்தீர்களே... அதேபோல், நாட்டின் பிரதமரைத் தவறாகச் சித்தரித்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் மீது தமிழகக் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? எனக் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: நீட் தேர்வர்கள் கவனத்திற்கு... ரீஃபண்​ட் குறித்து வெளியான அதி முக்கிய அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share