போராட்டம் பண்ணுவீங்களா.? மயிலாடுதுறையில் காங்கிரசார் மீது திமுகவினர் தாக்குதல்..!
மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற காங்கிரஸ் கட்சியினரை திமுகவினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததை கண்டித்து, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கும் எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினரை திமுகவினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு மாறியது. திமுக கூட்டணி முறிந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு முழு ஆதரவை கொடுத்தது. சட்டமன்ற தேர்தல் மட்டும் இல்லாமல் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் தமிழக வெற்றி கழகத்திற்கு தான் ஆதரவு என்றும் உறுதியாக தெரிவித்துவிட்டது.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியதால் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இதற்கிடையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் இதுவரை அழைக்கவில்லை. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இதையும் படிங்க: நொடிக்கு நொடி பரபரப்பு... நாடு அரசியலில் குழப்பம்... திமுக, அதிமுக, பாஜக, தவெக தனித்தனியாக அனல் பறக்கும் ஆலோசனை...!
அதன்படி மயிலாடுதுறையில் ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சியினர் முற்பட்டுள்ளனர். ஆளுநரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட சென்ற போது காங்கிரஸ் கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது காங்கிரஸ் கட்சியினரை சாலையில் திமுகவினர் ஓட ஓட விரட்டி தாக்கியதால் பரபரப்பு நிலவியது. அது மட்டுமல்லாது காங்கிரஸ் கட்சியின் கொடியை பிடுங்கி தூக்கி வீசினர். கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றதால் காங்கிரஸ் மீது இருந்த ஆத்திரத்தில் திமுகவினர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: திமுக தயவில் அதிமுக ஆட்சியா..? வாய்ப்பில்ல ராஜா..! கைவிரித்த டிகேஎஸ் இளங்கோவன்..!