×
 

"மோடியின் அடுத்த சவுக்கடி"..! ஏழை மக்கள் தவிக்குறாங்க..!! தமிழ்நாடு காங்கிரஸ் காட்டம்..!

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மானியத்துடன் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் 2016 ஆம் ஆண்டு மே 1 அன்று உத்தரப் பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா இந்தியாவின் கிராமப்புற மற்றும் ஏழை மக்களின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு முக்கியமான திட்டமாகும். சுத்தமான எரிபொருள், சிறந்த வாழ்க்கை என்ற முழக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பாரம்பரிய சமையல் எரிபொருள்களால் ஏற்படும் உட்புற காற்று மாசுபாட்டை குறைத்து, பெண்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு அதிகாரமளிக்கவும் உருவாக்கப்பட்டது. 

இந்திய கிராமங்களில் பெரும்பாலான ஏழை குடும்பங்கள் மரம், விறகு, காலி, எரு போன்ற பாரம்பரிய எரிபொருள்களைப் பயன்படுத்தி சமைத்து வந்தன. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் நீண்ட நேரம் புகைக்கு உள்ளாகி, சுவாசப் பிரச்சினைகள், கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு ஆளாகினர்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், உஜ்வாலா திட்டம் ஏழை குடும்பங்களின் பெண் உறுப்பினர்களின் பெயரில் இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. தற்போது சிலிண்டர்களின் எண்ணிக்கை 4 ஆக குறைக்கப்பட்டது என்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. பணவீக்க நாயகன் மோடியின் அடுத்த சவுக்கடி என்று குறிப்பிட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலையிலான LPG சிலிண்டர்களின் எண்ணிக்கை தற்போது ஆண்டுக்கு வெறும் 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: "உஜ்வாலா திட்டம்"..! மோடியால் இழைக்கப்பட்ட துரோகம்..! காங். எம்.பி. மாணிக்கம் தாகூர் விளாசல்..!!

மானியத்தின் தொடர் சரிவு என்றும் முன்பு மானியத்துடன் 12 சிலிண்டர்கள், பின்னர் 9 ஆகக் குறைப்பு, இப்போது வெறும் 4 சிலிண்டர்கள் மட்டுமே என்று கூறியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் அனைவருக்கும் கிடைத்த LPG சிலிண்டர் மானியத்தை மோடி அரசு ஏற்கனவே ரத்து செய்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏழை மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தத் தவிக்கிறார்கள்.,ஆனால், பாஜக அரசின் வசூல் வேட்டை மட்டும் தொடர்கிறது. இதுதானா நீங்கள் வாக்குறுதி அளித்த “வளர்ச்சி”? என்று பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளது. 

இதையும் படிங்க: 12 ஆண்டு கால ஆட்சியின் புதிய மைல்கல்..! நேருவின் சாதனையை முறியடிக்கும் பிரதமர் மோடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share