மாணவிகளுக்கு நிகழ்ந்த கொடுமை.! சகிக்க முடியாத குற்றம்..!! கொந்தளித்த செல்வப் பெருந்தகை..!!
புதுக்கோட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டி செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
செல்வபெருந்தகை புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அதிர்ச்சியூட்டும் சம்பவம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். பள்ளிக்குச் சென்ற 10 பழங்குடியின மாணவிகளை கூட்டத்தைக் காரணம் காட்டி கீழே இறங்கச் சொல்லி, அவர்கள் மறுத்ததால் பேருந்திலிருந்து தள்ளிவிட்டு காயப்படுத்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பள்ளிக்கூடங்கள் அனைத்துப் பின்னணியைச் சேர்ந்த குழந்தைகளும் சமத்துவத்துடனும் பாதுகாப்புடனும் கல்வி பயிலும் இடமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அத்தகைய சூழலில் பிஞ்சுக் குழந்தைகள் மீது சாதிய வன்மத்தைக் காட்டி அவர்களைக் காயப்படுத்துவது மனிதத்தன்மையற்றதும் சகித்துக்கொள்ள முடியாத குற்றமுமாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகளை சாதி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரினார். காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் அந்த 10 மாணவிகளுக்கும் உயர்தர மருத்துவச் சிகிச்சையையும், அவர்களின் மன அதிர்ச்சியைக் குறைக்கத் தேவையான உளவியல் ஆலோசனைகளையும் அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: ராகுல் விவகாரத்தில் விஜய்க்கு நேரடி மெசேஜ்! காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பால் மாறிய காட்சி!!
மாவட்டத்தில் உள்ள அனைத்துச் சமூகப் பிரிவு மாணவ-மாணவிகளுக்கும் பள்ளி மற்றும் பயண வழிகளில் முழுமையான பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறினார். இச்சம்பவம் குறித்து நடுநிலையான உயர் மட்ட விசாரணை நடத்தி, இதன் பின்னணியில் உள்ள அனைத்துச் சக்திகளையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.தமிழக அரசு இச்சம்பவத்தில் உடனடியாகத் தலையிட்டு பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என முன்னாள் செல்வபெருந்தகை கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் செய்த தவறுதான் விஜய் முதல்வரானது! சங்கரன்கோவிலில் டிடிவி தினகரன் பேட்டி!