×
 

அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு குக்கர்..! அதிரடியாக பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை..!

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வாக்காளர்களுக்கு வழங்க அதிமுக சார்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறக்கும் படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திவ்யாவைச் சுற்றி சர்ச்சை உருவாகியுள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு, மேட்டு திருக்காம்புலியூர் பகுதியில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.1000 வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட புலியூர் அருகே வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 50க்கும் மேற்பட்ட குக்கர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: #BREAKING: அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு..!! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!

சட்டமன்றத் தேர்தலுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணப் பரிவர்த்தனை, லஞ்சம், இலவசங்கள் வழங்குதல் போன்றவற்றைத் தடுக்க பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டன. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட குக்கர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி தரப்பில் பணப்பட்டுவாடா..! தேர்தலை நிறுத்தனும்..! அதிமுக வேட்பாளர் தர்ணா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share