செந்தில் பாலாஜி தரப்பில் பணப்பட்டுவாடா..! தேர்தலை நிறுத்தனும்..! அதிமுக வேட்பாளர் தர்ணா..!!
கோவை தெற்கு தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பரிசுப் பொருட்கள் வழங்குவது, பண பட்டுவாடா செய்வது ஆகியவற்றை தடுக்க தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தரப்பில் பணப்பட்டுவாடா செய்வதாகவும் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதிமுக வேட்பாளர் தர்ம போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பரிசுப் பொருட்கள் பணம் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் சில இடங்களில் பரிசு டோக்கன்கள், கூப்பன்கள், பண பட்டுவாடா ஆகியவை நிகழ்கின்றன. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தகைய சம்பவங்கள் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பை இறுக்கமாக்கின.
பணப் பரிவர்த்தனை, லஞ்சம், இலவசங்கள் வழங்குதல் போன்றவற்றைத் தடுக்க பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டன. இருப்பினும் திமுக வேட்பாளராக கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கி இருக்கும் செந்தில் பாலாஜி தரப்பில் பண பட்டுவாடா அமோகமாக நடப்பதாகவும் இரண்டு முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போராடி வருகிறார்.
இதையும் படிங்க: 2026 தேர்தல்..! 3 நாட்கள் மது கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு..!
திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தரப்பு வாக்காளர்கள் பணப்பட்டுவாடா செய்வதாக புகார் இரண்டு முறை புகார் அளித்தும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பணபட்டுவாடா காரணமாக தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். கோவை தெற்கு தேர்தலை நிறுத்தி வைக்க கோரி அதிமுக வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்மன் அர்ஜுனன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: இன்னும் புதிய வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோடு செய்யலையா..?? இத நோட் பண்ணிக்கோங்க..!!