×
 

#BREAKING நாட்டையே உலுக்கிய விவகாரத்தில் பரபரப்பு... தமிழக அரசு அதிகாரிகள் வீடுகளில் களமிறங்கிய அமலாக்கத்துறை...!

தமிழக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். 


ஸ்ரீபெரும்புதூரில் சீல் வைக்கப்பட்ட ஸ்ரேசன் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனின் வீட்டிலும் அமலாக்கு துறையினர் சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். 

மத்திய பிரதேச மாநிலம் சிந்துவாரா மாவட்டத்தில திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து அடுத்தடுத்து உயிரிழந்தார்கள். அதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் கூட குழந்தைகள் உயிரிழந்தான்ர். இதனையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார் சத்திரத்தில்  உள்ள ஸ்ரீசென் ஃபார்மா என்ற நிறுவனம் தயாரித்த ‘கோல்ட்​ரிப்’என்ற இருமல் மருந்தை உட்கொண்டது தான் காரணம் என தெரியவந்தது. 

அந்த மருந்தில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் எல்லாம் இருந்ததும் அடுத்தடுத்த ஆய்வில்ல கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று காலையிலேயே சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கோல்ட்​ரிப் நிறு​வனத்​தின் உரிமை​யாளர் ரங்​க​நாதனை(75) மத்​தி​யப் பிரதேச போலீ​ஸார் கைது செய்துள்ளனர். 

இதையும் படிங்க: அதிகாலையிலேயே துல்கர் சல்மான் வீட்டிற்குள் இறங்கிய அமலாக்கத்துறை... சென்னையில் தீவிர சோதனை...!

சென்னை கோடம்​பாக்​கம், நாகார்​ஜூனா நகர், 2-வது தெரு​வில் உள்ள அவரது வீட்​டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகளுடைய வீடுகளில் சோதனை நடக்கிறது. தமிழக உணவு மற்றும் மருந்து மருந்து தர கட்டுப்பாட்டு நிர்வாகத்தினுடைய இயக்குனர் தீபா உடைய திருவான்மையூர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இதேபோன்று இந்த துறையினுடைய இணை இயக்குனர் கார்த்திகேயனுடைய அண்ணா நகர் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  இதற்கு முன்னதாக மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்ஓ நேரடியாக ஆய்வு செய்த போது, இருமல் மருந்து தயாரிப்பு நிறுவன பல ஆண்டுகளாக எந்தவிதமான ஒரு ஆய்வையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். 

அதுமட்டுமல்ல தமிழக உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு நிர்வாக அடிப்படை வழிகாட்டு முறைகளை அந்நிறுவனம் அமல்படுத்தவில்லை என்பது தெரியவந்தது. ஏற்கனவே இது தொடர்பாக ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்ட மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்தினுடைய இரண்டு அதிகாரிகளின் காஞ்சிபுரம்  வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த மருந்து நிறுவனம் எந்தவிதமான வழிகாட்டுதலையும் பின்பற்றாமல் செயல்படுவதற்கு அதிகாரிகள் யாராவது லஞ்சம் பெற்றிருக்கிறார்களா? என்பது தொடர்பாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதா? என்பது குறித்தும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னதாக  தமிழக உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிர்வாகத்தினுடைய இணை இயக்குநர் கார்த்திகேயனின் வீட்டில் கடந்த ஜூலை மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினார். அந்த சோதனையின் போது 28 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: விஜய் தலைக்கு மேல் தொங்கும் கத்தி... இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போகும் பரபரப்பு தீர்ப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share