×
 

கோவையில் விடிய விடிய வேட்டை... கல்லூரி மாணவர்கள் அறையில் சிக்கிய பயங்கர பொருட்கள்... திகைத்துப்போன போலீஸ்...!

கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள அறைகளில் ஆயுதங்கள், போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களின் அறைகளிலிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட நிலையிலும், கிணத்துக்கடவு பகுதியில் அஸ்வின் என்பவர் கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையிலும், கோவை புறநகர் பகுதிகளில் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கும் கல்லூரி மாணவர்களின் அறைகளில் இன்று அதிகாலை போலீசார் திடீர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வழிப்பறி, கொள்ளை, பாலியல் சீண்டல் உள்ளிட்ட குற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில், நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஏழு கொலைகள் கோவை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளன.

இதையும் படிங்க: காலையிலேயே அதிரடி... கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளுக்குள் புகுந்த காவல்துறை... காரணம் என்ன?

இதனிடையே, கோவை மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 202 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்து வரும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கோவை புறநகர் பகுதியில் தங்கி இருக்கும் மாணவர்களின் அறைகளில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கோவில்பாளையம், சூலூர் மற்றும் செட்டிபாளையம் ஆகிய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று அதிகாலை இந்த திடீர் சோதனையானது நடத்தப்பட்டது.

மாணவர்களின் அறைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்தும், மாணவர்கள் அல்லாத வேறு நபர்கள் தங்கி இருக்கின்றனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

சில அறைகளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செட்டிபாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் ஐந்து இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 130 க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் 2 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் வாகன பதிவு எண் இல்லாத பத்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

இதையும் படிங்க: கோவையில் மீண்டும் அதிர்ச்சி... கஞ்சா கும்பலைக் காட்டிக் கொடுத்த இளைஞர் கொலை? - பகீர் பின்னணி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share