×
 

விவசாயிகளுக்காக ஆகஸ்ட் 6 முதல் நடைபயணம்! மத்திய அரசுக்கு எதிராக டி. ராஜா அதிரடி அறிவிப்பு!

விவசாயிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக ஆகஸ்ட் 6 முதல் 15 வரை நாடு முழுவதும் நடை பயணம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வலியுறுத்தி, வரும் ஆகஸ்ட் மாதம் நாடு தழுவிய அளவில் மாபெரும் நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) பொதுச்செயலாளர் டி. ராஜா அறிவித்துள்ளார்.

இந்தப் போராட்ட நடைபயணம் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை பத்து நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும். சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைப்படி விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதையும், விவசாயிகளின் கடன் சுமைகளைக் குறைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நடைபயணம் அமையும்.

டெல்லியில் முற்றுகைப் போராட்டம் அல்லது மிகப்பெரிய அளவிலான பேரணி நடத்துவது குறித்து, கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டிய டி. ராஜா, இந்தப் போராட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

இதையும் படிங்க: ஆளுநர் ஆட்சியை தவிர்க்கவே தவெக-விற்கு ஆதரவு! திமுக உறவு தொடரும் என இடதுசாரிகள் விளக்கம்!

தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், தேசிய அளவில் விவசாயிகளின் நலனுக்காக கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்துள்ள இந்த இந்தப் போராட்டம் அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிங்க: "மக்களால் இந்த விலைவாசி உயர்வைத் தாங்க முடியாது!" - சிலிண்டர் விலை உயர்வு குறித்து ஜோதிமணி எம்.பி கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share