×
 

"திடீரென முதல்வரை சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர்கள்"..! விஜயிடம் பேசியது என்ன..? பரபரப்பு பேட்டி..!!

முதல்வர் விஜய்யை சந்தித்த பிறகு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தோழமை கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் முதலமைச்சர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தினர். முதலமைச்சர் விஜயை சந்தித்த பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேசியதாக தெரிவித்தனர். பேட்டியின் போது பேசிய சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், தமிழக மக்களின் முக்கிய பிரச்சனை சார்ந்த கோரிக்கைகளை முதலமைச்சர் விஜய்யிடம் முன் வைத்ததாக தெரிவித்தார்.

கல்வித்தரம் பாதிப்பை தவிர்க்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலி பணியிடம் நிரப்பக் கோரிக்கை வைத்ததாக தெரிவித்துள்ளார். மேகதாது விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் சிங்கத்தின் சிறப்பு அதிரடி படையினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: விறுவிறு அரசியல்... ஒரே இடத்தில் கூடும் தவெக தோழமை கட்சிகள்..! CPM சண்முகத்துக்கு நேரில் அழைப்பு..!!

புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், முதல்வர் உடனான சந்திப்பில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்ததாக தெரிவித்திருக்கிறார். 

இதையும் படிங்க: DMK + ADMK + BJP..! கொள்கை புடலங்காய்... CPM விமர்சனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share