முடிஞ்சுது தீபாவளி... சென்னையில் இத்தனை மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகளா? அதிர்ச்சி ரிப்போர்ட்...!
தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் பட்டாசு கழிவுகள் அகற்றும் பணி மும்முரமாக மேற்கொள்ளப் பட்டது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக நேற்று நடந்து முடிந்தது. பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் பட்டாசு விற்பனை நடைபெற்றது. மக்கள் பாதுகாப்பாக பட்டாசுகளை வடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி காலை முதல் பட்டாசுகளை மக்கள் வெடிக்க தொடங்கினர்.
பட்டாசு கழிவுகள். தீபாவளி முடிந்த சில மணி நேரங்களிலேயே, வீதிகள், பூங்காக்கள், வீட்டு வாசல்கள் என அனைத்தும் பட்டாசு சாப்பிள்கள், துண்டுகள், இரசாயன அமிலங்கள் ஆகியவற்றால் நிரம்பிவிடுகின்றன. இந்தக் கழிவுகள் வெறும் குப்பை அல்ல. அவை சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, நீர்நிலைகளையும், குழந்தைகள் மற்றும் விலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக, குழந்தைகள், முதியோர் மற்றும் சுவாச நோயாளிகளுக்கு இது ஆபத்தானது. மேலும், இவை நீர்நிலைகளில் கலந்தால், மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை அழிக்கின்றன. இந்தியாவின் பெரு நகரங்களான சென்னை, மும்பை, டெல்லி, இந்தூர் போன்ற இடங்களில், தீபாவளி அன்று மட்டும் ஆயிரக்கணக்கான டன் கழிவுகள் உருவாகின்றன.
இதையும் படிங்க: #BREAKING: வெடித்து சிதறிய நாட்டு பட்டாசுகள்... உடல் கருகி 4 பேர் பலி… சென்னையில் சோகம்...!
சிறப்பாக நடந்து முடிந்த தீபாவளி பண்டிகையை அடுத்து சாலைகள் மற்றும் தெருக்களில் குவிந்துள்ள பட்டாசு கழிவுகளை நீக்கும் பணிகள் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். சென்னையில் சுமார் 6000 தூய்மை பணியாளர்கள் பட்டாசு கழிவுகள் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பில் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு... நாங்க கொடுக்கல... கை விரித்த தமிழக அரசு...!