4வது T20 கிரிக்கெட் போட்டி... இந்திய அணி அபார வெற்றி... சுருண்டது ஆஸ்திரேலியா...!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 4-வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 167 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.
தொடக்கத்தில் இருந்தே இருவரும் ரன்களை சேர்க்க ஆரம்பித்தனர். இந்த நிலையில், 28 ரன்கள் எடுத்திருந்தபோது, அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிவம் டூபே கில்லுடன் ஜோடி சேர்ந்து, தூபே அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். பிறகு 22 ரன்களுக்கு ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, கேப்டன் சூர்யகுமார் களமிறங்கினார்.
இறுதியில், அதிரடி காட்டிய அக்சர் படேல் 11 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் தொடர்ந்தார். வருண் சக்கரவர்த்தி 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக எல்லிஸ் மற்றும் ஜாம்பா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையும் படிங்க: IND vs AUS கிரிக்கெட்... தொடரை வென்றது ஆஸ்திரேலியா... இந்திய அணி தோல்வி...!
இவ்வாறாக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஆஸ்திரேலியாவை 119 ரன்களுக்குள் இந்திய அணி சுருட்டியது. இதன் மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: எங்களுக்கு வேண்டாம்! SIR தமிழ்நாட்டுக்கு பாதகம்... திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...!