×
 

#BREAKING கடலூர் ரயில் விபத்து - திடீர் திருப்பமாக வெளியான முக்கிய தகவல்...!

கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கடலூர் தனியார் பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கடலூர் தனியார் பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

கடலூர் செம்மப்பம் பகுதியில பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் இரண்டு மாணவர், ஒரு மாணவி உயிரிழந்தனர். இந்த விபத்து நடந்த அந்த பள்ளி வேன் குறித்து பள்ளி கல்வித்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த பள்ளி வேனில் 4 மாணவ, மாணவிகளும் ஒரு ஓட்டுநர் மட்டுமே பயணம் செய்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி பள்ளி வாகனங்களில் ஓட்டுநருடன் கட்டாயம் ஒரு உதவியாளர் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் விபத்துக்குள்ளான பள்ளி வாகனத்திற்கு உதவியாளர் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து உதவியாளர் இல்லாதது குறித்து விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடலூரில் உள்ள தனியார் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பள்ளி வேன் மீது ரயில் மோதியது எப்படி? - விபத்தை நேரில் பார்த்தவர் சொன்ன பகீர் காரணம் - கொதித்தெழுந்த மக்கள்...!

விபத்தில் நடத்தது என்ன? 

இன்று காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பேசஞ்சர் ரயில் செம்மாங்குப்பம் ரயில்வே கேட் அருகே சென்றபோது தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கிராஸ் செய்து வந்தபோது விபத்து ஏற்பட்டது. ரயில்வே கேட் மூதாதால் ரயில் வரவில்லை என அறிந்த பள்ளி வேன் ஓட்டுநர் வாகனத்தை இயக்கி சென்றுள்ளார் இந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தால் பள்ளி வேன் 50 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நசிங்கி உள்ளது.

அதில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் உள்ளிட்டோர் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில் தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த நிவாஸ் என்ற 12 வயது மாணவன் அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சாருமதி என்ற 16 வயது மாணவியும், செழியன் என்ற 15 வயது மாணவனும் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் சின்ன காட்டு சாகை சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த திராவிட மணி என்பவரது மகன் மற்றும் மகள் ஆவர். 

தற்போது  விஷ்வேஸ் என்ற மாணவன்,   பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் (47), விபத்தை பார்க வந்த அண்ணாதுரை வயது 55 ஆகியோர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: #BREAKING ரயில் மோதி சுக்கு நூறான பள்ளி வேன்.. நெஞ்சை உலுக்கும் கோரம்.. 2 மாணவர்கள் உட்பட 4 பேர் பலி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share