கடலூர் இளம் பெண் கொலையில் திடீர் திருப்பம்... ட்விஸ்ட்டை உடைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...!
இதனால் ஆத்திரமடைந்த காமாட்சி, மகேந்திரனை செருப்பால் அடித்ததுடன், அவரது செல்போனை எடுத்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிப்பதாக எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மீதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் காமாட்சி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கணவரைப் பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த காமாட்சியை, அதே கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான மகேந்திரன், தனது விருப்பத்திற்கு இணங்குமாறு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில், காமாட்சியின் கையைப் பிடித்து இழுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த காமாட்சி, மகேந்திரனை செருப்பால் அடித்ததுடன், அவரது செல்போனை எடுத்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிப்பதாக எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து காமாட்சியை கொலை செய்ய முடிவு செய்த மகேந்திரன், இன்று காலை வீட்டில் இருந்த காமாட்சியை கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். மேலும், அவரைக் காப்பாற்ற முயன்ற காமாட்சியின் தந்தை பாண்டுரங்கனையும் இரும்புக் குழாயால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இச்சம்பவத்தில் மகேந்திரனை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு அதே ஊரைச் சேர்ந்த குற்றவாளியான மகேந்திரன் என்பவர் ரூ. 2 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளார்
இதையும் படிங்க: What Bro... Very Wrong Bro!”... மாரிதாஸ் கைது..! பொளந்துக்கட்டிய அதிமுக..!!
இரண்டு பேரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த உதவியை செய்துள்ளார். அவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். அந்த பணத்தை அவர் திரும்பி கேட்டு உள்ளார். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட பெண் காமாட்சி தனியாக இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டு அவரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு நோக்கமும் குற்றவாளிக்கு இருந்திருக்கிறது
இதை ஊரில் அவர் பரப்பியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் காமாட்சி, குற்றவாளியான மகேந்திரனை சில மாதங்களுக்கு முன்பு காட்டுமன்னார்கோயிலுக்கு வரவழைத்து தங்கள் இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவரது செல்போனிலேயே அவர் பேசும்படி ரெக்கார்ட் செய்துள்ளார்
பின்னர் ஊருக்குள் வந்த மகேந்திரன் ஊரார் மூலம் தனது செல்போனை வாங்கியுள்ளார். ஆனால் கடந்த 15 தினங்களுக்கு முன்பு ரெகார்ட் செய்யப்பட்ட வீடியோ அந்த ஊரில் உள்ள சமூக வலைத்தளங்களில் வெளியானது.
இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன் இன்று காலை வயலுக்கு செல்லும்போது கோலம் போட்டுக் கொண்டிருந்த காமாட்சியிடம் தகராறு செய்து இரும்பு பைபால் தாக்கி கொலை செய்துள்ளார். தற்போது குற்றவாளிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
இதையும் படிங்க: “நான் இல்லாமல் கூட்டத்தை நடத்திடுவியா நீ...” - காங்கிரஸ் கனவில் கல்லைப் போட்ட திமுக... பரபரப்பான டெல்லி...!