செருப்பால் அடித்த இளம்பெண்ணை செதில் செதிலாக வெட்டி வீசிய 68 வயது முதியவர்... பகீர் காரணம்...!
காமாட்சியை கொலை செய்ய முடிவு செய்த மகேந்திரன், இன்று காலை வீட்டில் இருந்த காமாட்சியை கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மீதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் காமாட்சி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கணவரைப் பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள மீதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் - காமாட்சி தம்பதியருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு கணவரைப் பிரிந்து, காமாட்சி தனது தங்கை வீட்டில், மீதிக்குடி செங்கமன்பேட்டை தெரு பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான மகேந்திரன், காமாட்சியிடம் தனது விருப்பத்திற்கு இணங்குமாறு தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில், காமாட்சியின் கையைப் பிடித்து இழுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரையில் கொடூரம்... கள்ள காதலால் கணவனுடன் வெடித்த சண்டை... பெற்ற தாயே 9 மாத குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற பயங்கரம்...!
இதனால் ஆத்திரமடைந்த காமாட்சி, மகேந்திரனை செருப்பால் அடித்ததுடன், அவரது செல்போனை எடுத்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிப்பதாக எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து காமாட்சியை கொலை செய்ய முடிவு செய்த மகேந்திரன், இன்று காலை வீட்டில் இருந்த காமாட்சியை கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். மேலும், அவரைக் காப்பாற்ற முயன்ற காமாட்சியின் தந்தை பாண்டுரங்கனையும் இரும்புக் குழாயால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாமலைநகர் போலீசார், காமாட்சியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 65 வயதான நபர் ஒருவர், கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் தனது விருப்பத்திற்கு இணங்காத காரணத்தால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாக கூறப்படும் இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விடிந்ததுமே பேரதிர்ச்சி... கல்லால் அடித்து இளைஞர் கொலை... நெல்லையில் அரங்கேறிய பயங்கரம்...!