×
 

விடிந்ததுமே பேரதிர்ச்சி... கல்லால் அடித்து இளைஞர் கொலை... நெல்லையில் அரங்கேறிய பயங்கரம்...!

நெல்லை கிருஷ்ணாபுரம் அருகே டாஸ்மாக் பாரில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது

நெல்லை கிருஷ்ணாபுரம் ஆதிபராசக்தி நகர் பகுதியில் டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் நேற்று இரவு 7 மணிக்கு சில வாலிபர்கள் ஒன்றாக சேர்ந்து மது குடிக்க வந்துள்ளனர். அப்பொழுது மது போதையில் இருந்த வாலிபர்கள் ஒருவருக்கொருவர் மாறி மாறி வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தகராறு முற்றிய நிலையில் ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 
அப்போது மணிகண்டன் என்ற வாலிபர் நெல்லை மேல புத்தனேரி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் வயது 24 என்ற வாலிபரை கல்லால் தாக்கினார். 


காயம் அடைந்த ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் சிவந்திபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்... 3 சிறுவர்கள் உட்பட 8 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

அதற்குள் கொலை செய்துவிட்டு மணிகண்டன் அங்கிருந்து தப்பி சென்றார். சிறிது நேரத்தில் அங்கு வந்த சிவந்திபட்டி  காவல்துறையினர்  இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

தப்பிச்சென்ற மணிகண்டனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் இரவு நேரத்தில் சிவந்திபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதுங்கி இருந்தபோது கைது செய்தனர். மேலும் இந்த கொலைககான காரணம் என்ன காவல்துறையினர் மணிகண்டனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 10 மாதம் தலைமறைவு... தட்டித் தூக்கிய போலீஸ்...!! கதறி அழுத சுர்ஜித்தின் தாய்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share