"தயங்காதிங்க"..! உதவ நான் இருக்கேன்..! மயிலம் மக்களுக்கு நன்றி சொன்ன C.V. சண்முகம்..!!
மயில மக்களுக்கு இரண்டாவது நாளாக சி.வி சண்முகம் நன்றி தெரிவித்தார்.
மயிலம் தொகுதி வாக்காளர்களுக்கு இரண்டாவது நாளாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நன்றி தெரிவித்துள்ளார். போராட்டங்களை நடத்தி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக இருக்கிறேன் என கூறினார். விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இரண்டாவது நாளாக வல்லம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிக்குளம், மேல் அத்திப்பாக்கம், ஏதாநெமிலி,வீரணாமூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்களில் சென்று தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
மேல் அத்திப்பாக்கம் கிராமத்தில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய முன்னாள் அமைச்சரும் மயிலம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் தனது வெற்றிக்காக பாடுபட்ட கட்சி நிர்வாகிகள்,கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற வைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நம்பிக்கைக்குறியவானக செயல்படுவேன் எனவும் உறுதியளித்தார். உண்மையாக இருப்பேன், விசுவாசமாக இருப்பேன். உங்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: குதிரை பேரம் சர்ச்சை... கொதிக்கும் அதிமுக..!! ஆளுநரிடம் முறையீடு..!!
உங்களுக்கு தனிப்பட்ட முறையில் என்ன உதவி வேண்டுமானாலும் என்னை நீங்கள் அணுகலாம் தயக்கம் வேண்டாம் என்று கூறிய அவர், என்னால் என் சக்திக்கு முடிந்த அனைத்தையும் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் செய்து தருவேன் என்றும் போராட்டங்களை நடத்தி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தயாராக இருப்பேன் என்று கூறினார்.
இதையும் படிங்க: "PR பில்டப் போதும்"..! ஓட்டு போட்ட மக்களை பாருங்க... முதல்வர் விஜயை விளாசிய அதிமுக..!!