அதிமுக பிளவுக்கு full stop..! சபாநாயகர் பிரபாகரை நேரில் சந்தித்த சி.விஜயபாஸ்கர்!
அதிமுக அணிகள் இணைந்த நிலையில் சபாநாயகரை சி விஜயபாஸ்கர் சந்தித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்த நிலையில், கட்சியின் உள்கட்டமைப்பில் கடும் பிளவு ஏற்பட்டது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையிலான தனி அணிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது.
இந்தப் பிளவு சட்டமன்ற நடவடிக்கைகளிலும், குறிப்பாக கொறடா நியமனம் தொடர்பாகவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்தனர். ஈபிஎஸ் தரப்பில் சுமார் 22 எம்எல்ஏக்களும், வேலுமணி-சண்முகம் தரப்பில் 25 எம்எல்ஏக்களும் இருப்பதாகக் கூறப்பட்டது. இரு தரப்பும் தங்கள் சொந்த கொறடாவை நியமித்துக் கொண்டனர்.
ஈபிஎஸ் தரப்பு ஒரு கொறடாவை அறிவித்த நிலையில், வேலுமணி தரப்பு சி. விஜயபாஸ்கரை தங்கள் அணியின் கொறடாவாக நியமித்து, அதை சபாநாயகரிடம் அங்கீகரிக்கக் கோரியது. வேலுமணி தரப்பினர் தற்காலிக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர். தற்போது அதிமுகவில் ஏற்பட்ட பிளவு சரி செய்யப்பட்டு மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி திறக்கும் வேலுமணி தரப்பும் இணைந்தனர்.
இதையும் படிங்க: விஜய்யை நம்பி எல்லாமே போச்சு!! எஸ்.பி வேலுமணி - சி.வி.சண்முகம் பயங்கர மோதல்! பகீர் பின்னணி!
பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு இந்த இணைப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் கொறடாவாக தன்னை நியமிக்க வேண்டும் என்று கொடுத்த மனுவை திரும்பப் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் சென்றார். சபாநாயகர் பிரபாகரை சந்தித்து உள்ளார்.
இதையும் படிங்க: 40 எம்.எல்.ஏ-க்கள் ஒன்றிணைப்பு! இபிஎஸ் பலம் அதிகரிப்பு! முரண்டு பிடிக்கும் சி.வி.சண்முகம்!