நதிகள் இணைப்பு..!! "வரலாற்றுத் திட்டம்"..! முதல்வர் விஜயை புகழ்ந்து தள்ளிய C. விஜயபாஸ்கர்..!
பட்ஜெட்டில் நதிகள் இணைப்புக்காக நிதி ஒதுக்கியதை C. விஜயபாஸ்கர் புகழ்ந்துள்ளார்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வாழும் லட்சக்கணக்கான விவசாயிகளின் நீண்டகால கனவாக இருந்த காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு நதி இணைப்புத் திட்டம், 2026-27 நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் முக்கிய இடம் பெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைமையிலான அரசு, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இந்த அறிவிப்பு வெளியானது. நீர்வள மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
இதனை முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் புகழ்ந்துள்ளார். ‘காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம்’ என்பது வெறும் நீர்ப்பாசனத் திட்டம் மட்டுமல்ல. புதுக்கோட்டை உள்ளிட்ட ஏழு மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், பல இலட்சம் ஹெக்டேர் விவசாய விளைநிலங்களின் எதிர்காலத்தையும் தாங்கி நிற்கும் வரலாற்றுத் திட்டம் என கூறினார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டம் ஆபத்தானது! அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
கடந்த ஐந்தாண்டுகளாக நிதி ஒதுக்கீடு இன்றி முடங்கியிருந்த இத்திட்டத்திற்கு, இன்றைய நிதிநிலை அறிக்கையில் 150 கோடி ரூபாய் ஒதுக்கி, இத்திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும்’ என அறிவித்திருப்பது, வறண்ட மண்ணில் நீரை மட்டுமல்ல. விவசாயியின் மனதில் நம்பிக்கையையும் பாய்ச்சிய அறிவிப்பு என்றார். ஆறுகள் இணையும் போது நீர் பெருகும் என்றும் அரசின் உறுதி இணையும் போது விவசாயி எதிர்காலம் செழிக்கும் எனவும் தெரிவித்தார். அதனை சாத்தியமாக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு புதுக்கோட்டை மாவட்ட மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!