×
 

டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டம் ஆபத்தானது! அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுவகைகளை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தவிருக்கும் அரசின் முடிவிற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி கடும் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் ஆன்லைன் முன்பதிவுக்கான தனி இணையதளம் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மதுவை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தி ஒழிப்பதற்குப் பதிலாக, அதனை வாங்குவதைக் மிக எளிதானதாக மாற்றும் இத்தகைய முயற்சி மிகவும் பிற்போக்கானது என்று அவர் விமர்சித்துள்ளார்.

நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்களைப் பெறப் பொதுமக்கள் மற்றும் பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையில், அவர்களின் சிரமத்தைப் போக்க நடவடிக்கை எடுக்காத அரசு, மதுப்பிரியர்களின் வசதிக்காக ஆன்லைன் முன்பதிவு முறையைக் கொண்டுவருவது சமூகச் சீரழிவிற்கே வழிவகுக்கும் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், வரிசையில் நிற்க வேண்டிய பயம் இல்லாத நிலை உருவானால் மாணவர்கள் மற்றும் இளம்பெண்கள் குடிப்பழக்கத்திற்கு எளிதில் அடிமையாகும் ஆபத்து ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: 502 செவிலியர் பணியிடங்கள் ரத்து! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

கல்வி, மருத்துவம், வேளாண்மை மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசியத் துறைகளில் சீர்திருத்தங்களைச் செய்யாமல், மது வணிகத்தில் மட்டும் ஆர்வம் காட்டுவது சரியல்ல என்றும், இதனால் மதுப் புழக்கமும் விற்பனையும் பலமடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த கேடான ஆன்லைன் மது முன்பதிவு திட்டத்தை மாநில அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது! டெல்லி போராட்டத்தை சுட்டிக்காட்டி அன்புமணி இராமதாஸ் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share