×
 

CASH BACK... DEEP FAKE... உஷார் மக்களே..! பண்டிகை கால மோசடி... எச்சரிக்கை...!

பண்டிகை காலங்களில் நடைபெறும் மோசடி தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பண்டிகை காலங்கள் என்றாலே மகிழ்ச்சி, கொண்டாட்டங்கள், உறவினர்களுடனான சந்திப்புகள், பரிசுப் பொருட்கள் வாங்குதல், பயணங்கள் என பல்வேறு உற்சாகமான நிகழ்வுகள் நிறைந்தவை. தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகளில் ஆன்லைன் ஷாப்பிங், டிக்கெட் புக் செய்தல், பரிசு அனுப்புதல் போன்றவை அதிகரிக்கின்றன. ஆனால் இதே காலகட்டத்தில் சைபர் மோசடிகளும் பெருகி வருகின்றன. மோசடி செய்பவர்கள் மக்களின் உற்சாகத்தையும், அவசரத்தையும் பயன்படுத்தி பணத்தை சுருட்டுகின்றனர். கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் பண்டிகை கால சைபர் மோசடிகளால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பண்டிகை காலங்களில் ஆன்லைன் ஷாப்பிங் அதிகரிப்பதால், அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் பெரும் தள்ளுபடிகள் அறிவிக்கப்படுகின்றன. இதைப் பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் போலி இணையதளங்களை உருவாக்குகின்றனர். இவை உண்மையான தளங்களைப் போலவே தோற்றமளிக்கும். உதாரணமாக, "diwali sale" அல்லது "christmas offer" அல்லது “pongal offer” என்ற பெயரில் போலி தளங்கள் உருவாக்கப்பட்டு, கவர்ச்சிகரமான ஆஃபர்களை விளம்பரப்படுத்துகின்றனர். பொருட்களை ஆர்டர் செய்தால் பணம் பறிபோகும், அல்லது தரமற்ற பொருட்கள் வந்து சேரும். சில சமயங்களில் கிரெடிட் கார்டு விவரங்களை திருடி பணத்தை செலவழிக்கின்றனர்.

 போலியான ஷாப்பிங் இணையதளம் மற்றும் லிங்க், போலியான பரிசு கூப்பன்கள், UPI/QR code வழியாகப் பண மோசடி, Deep fake முறையில் போலி விளம்பரங்கள், போலி நன்கொடை மோசடி, போலி நிறுவனங்களின் பெயரில் கடன், கேஷ்-பேக் சலுகை போன்றவற்றை மக்கள் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற மோசடிகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டிய அறிவுறுத்தல்களை தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பது கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: “பெரியாரின் ஈகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்!” – அவதூறு பேசுவோருக்கு திருமாவளவன் கடும் எச்சரிக்கை!

இணையதள முகவரியினைச் சரி பார்க்க வேண்டும் என்றும் விளம்பரங்கள் மற்றும் சலுகைகளை சரி பார்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்கொடைகளுக்கு முன்பு விபரங்களை சரி பார்க்க வேண்டும் என்றும் ஓடிபி, வங்கி விவரங்களை பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்திற்கு இடமான லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “வன்முறையை தூண்டினால் எக்ஸ் தளம் மீது நடவடிக்கை!” - தமிழக சைபர் கிரைம் போலீஸ் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share