×
 

இதுக்கு ஒரு END- ஏ இல்லையா..? ஒரு வணிக சிலிண்டர் விலை ரூ.7500..? தத்தளிக்கும் ஹோட்டல்கள்..!!

வணிக சிலிண்டர்கள் 7500 ரூபாய்க்கு கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்தியாவில் GAS சிலிண்டர் தட்டுப்பாடு என்ற பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது உலக அளவிலான புவிசார் அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய தாக்கம். முக்கிய காரணம் மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதை தடைபட்டது.

வணிக உபயோக சிலிண்டர்களின் விநியோகம் பல இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு, சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் ஹோட்டல்கள், உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

25 நாட்களுக்கு ஒரு முறை வீட்டு சிலிண்டர்கள் புக்கிங் செய்து மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு பெருமளவு தலை தூக்கி இருக்கிறது. ஒரு சிலிண்டர் 2000 ரூபாயிலிருந்து நான்காயிரம் ரூபாய், ஐந்தாயிரம் ரூபாய் என உயர்ந்து கொண்டே சென்றது. பல உணவகங்களை மூடி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கும் சூழலில், ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகள் குறைக்கப்பட்டும், நேரத்தை குறைத்தும் வருகின்றனர். 

இதையும் படிங்க: கடும் தட்டுப்பாடு..!! பதுக்கி வைக்கப்பட்ட 200 சிலிண்டர்கள் பறிமுதல்.. அதிரடி நடவடிக்கை..!!

தற்போது ஒரு வணிக சிலிண்டரின் விலை 7500 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் இதனால் ஹோட்டல்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. கள்ளச் சந்தையில் இது போல அதிக ரூபாய்க்கு சிலிண்டர்கள் விற்கப்பட்டாலும் என்ன செய்வதென்றே தெரியாமல் கேட்கும் விலை கொடுத்து சிலிண்டர்களை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். 

இதையும் படிங்க: ஜாடிக்கு ஏத்த மூடி..! சிலிண்டர் தட்டுபாட்டால் சிக்கி தவிக்கும் மக்கள்... பாஜக, அதிமுகவை கிழித்த முதல்வர் ஸ்டாலின்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share