×
 

ஜாடிக்கு ஏத்த மூடி..! சிலிண்டர் தட்டுபாட்டால் சிக்கி தவிக்கும் மக்கள்... பாஜக, அதிமுகவை கிழித்த முதல்வர் ஸ்டாலின்..!!

சிலிண்டர் தட்டுப்பாட்டு பிரச்சனையில் இருந்து திசை திருப்பவே தொகுதி மறு வரையறை பற்றி பேசுவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

இந்தியாவில் GAS சிலிண்டர் தட்டுப்பாடு என்ற பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது உலக அளவிலான புவிசார் அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய தாக்கம். முக்கிய காரணம் மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதை தடைபட்டது. வணிக உபயோக சிலிண்டர்களின் விநியோகம் பல இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு, சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் ஹோட்டல்கள், உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், "கோவிட் காலத்தைப் போல" என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை script-ஐத் தற்போது கையிலெடுத்துள்ளது என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

இதையும் படிங்க: திருநங்கைகள் உரிமை பறிபோகும் அபாயம்... மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு...!

பா.ஜ.க. ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அ.தி.மு.க.வோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள் என்று தெரிவித்தார்.

சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது என்று. கேள்வி எழுப்பினார். மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என்றும் "இத்தனைக்கும் பொறுப்பான மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்கிறது? என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

இதையும் படிங்க: சோழவந்தான் தொகுதியில் வெற்றி சரித்திரம் படைக்கணும்..!! 200 தொகுதிகளில் உறுதி..! அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share