×
 

லஞ்சம் கேட்டா இத செய்யுங்க..! Vijay அரசின் புதிய Formula..! அதிரடி நடவடிக்கை..!!

லஞ்சம் குறித்து புகார் அளிக்க அலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவை வெளியிடப்பட்டு உள்ளன.

தமிழக அரசு ஊழலை ஒழிக்கும் நோக்கில் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. லஞ்சம் கோரும் அரசு ஊழியர்கள் மீது உடனடியாக புகார் அளிக்க மக்களுக்கு வசதியாக புதிய வாட்ஸ் ஆப் எண் உள்ளிட்ட பல்வேறு தொடர்பு வழிகளை லஞ்ச ஒழிப்புத் துறை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் பொதுமக்கள் தங்கள் அன்றாட அலுவல்களில் சந்திக்கும் லஞ்சப் பிரச்சினைகளுக்கு எதிராக எளிதாகவும் பாதுகாப்பாகவும் தொடர்புகொள்ள முடியும்.

முதல்வர் அலுவலகத்தின் உத்தரவின்படி தலைமைச் செயலர் எம். சாய் குமார் வெளியிட்ட சுற்றறிக்கையில், அனைத்து அரசுத் துறைகளும் தங்கள் இணையதளங்கள் மற்றும் அலுவலகங்களில் இந்த புகார் தொடர்பு விவரங்களைத் தெளிவாகக் காட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், “லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம்” என்ற வாசகத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொண்ட பலகைகளை அரசு அலுவலகங்களில் கட்டாயம் வைக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது ஊழலுக்கு எதிரான அரசின் உறுதியான நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது. பொதுமக்கள் லஞ்சம் கோரும் அரசு ஊழியர்கள் தொடர்பான புகார்களை வாட்ஸ் ஆப் எண்: 94981 80936 , மின்னஞ்சல் முகவரி: dvac@nic.in, தொலைபேசி எண்கள்: 044-22321090, 044-22321085, 044-22310989, 044-22342142 ஆகியவற்றை தொடர்புக் கொண்டு புகார் கொடுக்கலாம்.

இதையும் படிங்க: தவெக எம்.எல்.ஏ.க்களாலேயே விஜய் ஆட்சி கவிழும்... ‘க்’ வைத்து எச்சரித்த அனிதா ராதாகிருஷ்ணன்...!

இந்த எண்களில் புகார் அளிக்கும்போது, புகார்தாரர் தனது பெயர், தொடர்பு எண், அலுவலகம், துறை விவரங்கள், லஞ்சம் கோரிய ஊழியரின் பெயர், பதவி, கோரப்பட்ட தொகை மற்றும் ஆதாரங்கள் (ஆடியோ, வீடியோ, ஆவணங்கள் போன்றவை) ஆகியவற்றை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அனைத்து புகார்களும் ரகசியமாகப் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத் துறை உறுதியளித்துள்ளது.இந்த அதிரடி நடவடிக்கை தமிழகத்தில் ஊழலை ஒழிப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: காலை உணவு திட்டத்திற்கு தடை?! முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு! விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share