×
 

காலை உணவு திட்டத்திற்கு தடை?! முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு! விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தில், உணவு தரத்தை மேம்படுத்த, முதல்வர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தில் முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன. மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உயர்த்தி, வீடுகளில் சமைக்கும் உணவைப் போன்ற சுவை மற்றும் ஊட்டச்சத்துடன் உணவு வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சத்துணவு திட்டத்தின் உணவு பட்டியலில் மாற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் தற்போது சத்துணவு திட்டத்தின் மூலம் 40.81 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், கருப்பு கொண்டைக்கடலை குழம்பு, தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம் மற்றும் கீரை சாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தில் உப்புமா, கிச்சடி மற்றும் பொங்கல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த காலை உணவு திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட உள்ளது.

பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், சத்துணவு திட்டத்தின் தரத்தை மேம்படுத்துவது குறித்து முதல்வர் விஜய் விரிவாக ஆலோசனை நடத்தினார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு சத்தானதாக மட்டுமல்லாமல், தரமானதாகவும், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதற்காக புதிய உணவு பட்டியல் தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். புதிய மெனு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 30 குண்டுகள் முழங்க எழுத்தாளர் பூமணி உடல் நல்லடக்கம்! அரசு மரியாதையுடன் கண்ணீர் அஞ்சலி!

இதற்கிடையில், கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு வழங்கப்படாமல், அதற்கு பதிலாக மாணவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் தினமும் மாணவர்களுக்கு போதுமான அளவில் தரமான உணவு வழங்கப்படுவதை தலைமை ஆசிரியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், எந்த பள்ளியிலும் காலை உணவு வழங்குவதில் குறைபாடு ஏற்படாமல் மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: ஆட்சி மாறினாலும் கஞ்சா புழக்கம் குறையவில்லை! எண்ணூர் சம்பவத்தை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் கண்டனம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share