முக்கிய துறைகளுக்கு ரூ.11 கோடி கடன்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த நிதியமைச்சர்..!
முக்கிய துறைகளுக்கு 11 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்று தமிழக சட்டப்பேரவையில் 2026-2027 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் நிதியாண்டில் முன்னுரிமை துறைகளுக்கு ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்குவதை இலக்காக நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முடிவு என்பதில் ஐயமில்லை. முன்னுரிமை துறைகள் என்றால் பொதுவாக விவசாயம், சிறு மற்றும் குறு தொழில்கள், நடுத்தர தொழில்கள், வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம் போன்றவை அடங்கும். இவை நாட்டின் அடித்தள பொருளாதாரத்தை வலுப்படுத்தும் துறைகள்.
இந்தத் துறைகளுக்கு வங்கிகள் மூலம் போதுமான கடன் கிடைக்காவிட்டால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கை மேம்படுவது கடினமாகிவிடும். அதனால்தான் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி வங்கிகள் தங்கள் மொத்த கடனில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இத்தகைய துறைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. தமிழகத்தில் இந்த இலக்கை மேலும் உயர்த்தி ரூ.11 லட்சம் கோடி என்ற அளவுக்கு நிர்ணயித்திருப்பது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட்..! மருத்துவ துறைக்கு மாஸ் அறிவிப்பு...! ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு..!
இந்த அறிவிப்பு குறிப்பாக விவசாயிகளுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. தமிழகத்தில் விவசாயம் இன்னும் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. பயிர் கடன், நீர்ப்பாசன வசதிகள், இயந்திரங்கள் வாங்குதல், சேமிப்பு கிடங்குகள் அமைத்தல் போன்றவற்றுக்கு கடன் எளிதாகக் கிடைத்தால், உற்பத்தி அதிகரிக்கும் என்றும் விவசாயிகளின் வருமானம் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சிறப்பு செயலாக்க திட்டங்களுக்கு ரூ.17 கோடி...! பேரவையில் அடுத்தடுத்து வெளியான தரமான அறிவிப்புகள்..!